Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: புதிய அப்டேட்

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: புதிய அப்டேட்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆன தமிழ்ப்படங்களில் ஒன்று. இந்த படத்தை இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை தமிழில் தயாரித்த சஷிகாந்த், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியில் தயாரிக்கவுள்ளார்.
அதேபோல் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இந்த படத்தை இயக்கவுள்ளனர். ஆனால் விஜய்சேதுபதி, மாதவன் கேரக்டர்களில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 source - Indiaglitz

share