Kollywood News

  • Home/
  • Cine News/
  • காதலர்களுக்காக மீண்டும் வெளிவரும் சிம்புவின் “விண்ணைத் தாண்டி வருவாயா”!!

காதலர்களுக்காக மீண்டும் வெளிவரும் சிம்புவின் “விண்ணைத் தாண்டி வருவாயா”!!


இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது “விண்ணைத்தாண்டி வருவாயா”. சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. காதல் கதையில் உருவான இப்படத்தினை மீண்டும் உதயமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.


இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் மீண்டும் அந்த படத்தை திரையிடப் போகின்றனர். பிப்ரவரி 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் படத்தினை திரையிட முடிவு செய்துள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் மற்றும் காதலர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

share