Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’விஐபி-2’ல் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது - சரண்யா பொன்வண்ணன்..!!

’விஐபி-2’ல் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது - சரண்யா பொன்வண்ணன்..!!


வேலையில்லாத பட்டதாரி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

இதன் படப்பிடிப்பு நேற்றிலிருந்து துவங்கியது. படத்தினை இயக்குகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட இருக்கிறது.

எனவே முதல் பாகத்தில் நடித்த அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், ரிஷிகேஷ் ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். மேலும் முதல் பாகத்தில் முதல் பாதியிலேயே இறந்த சரண்யா பொன்வண்ணனும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். அதெப்படி என கேட்டபோது, ” ஆம் நான் விஐபி 2-வில் நடிக்கிறேன். ஆனால் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்பதை படம் வெளியாகும்போது நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்” என்றார்.

share