Kollywood News

  • Home/
  • Cine News/
  • விசாரணை படத்தினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

விசாரணை படத்தினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!


இயக்குனர் திரு வெற்றி மாறனின் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்க உருவாகியுள்ளது “விசாரணை”. படம் நாளை முதல் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் பல பிரபலங்கள் படத்தினை பற்றி நல்ல ஒரு விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் மணிரத்னம் விசாரணை படத்தினை பற்றி கூறியதாவது ”சமீபத்தில் நான் பார்த்த தமிழ் படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் விசாரணை” என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விசாரணை படத்தினை பற்றிய விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிது நேரத்திற்கு முன் பகிர்ந்துள்ளார். விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்” என்று ரஜினி கூறியுள்ளார்

share