Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’நடிகர் சங்கத்தில் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ - அடித்து கூறுகிறார் விஷால்...!!

’நடிகர் சங்கத்தில் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ - அடித்து கூறுகிறார் விஷால்...!!



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசுப் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசும் போது,

’தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி ,
​ சுந்தர்.சி , குஷ்பூ ,​ நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர்.

 ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர்சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். 

இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் என்றார் பொது செயலாளர் விஷால்.

share