Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராதாரவியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கண்டன கடிதம் அனுப்பிய விஷால்:

ராதாரவியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கண்டன கடிதம் அனுப்பிய விஷால்:

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி குறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.

நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாகவும் சமீபத்தில் அவர் பேசும் நாகரீகமற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் ராதாரவி அவர்கள் தன்னுடைய பெயரிலேயே பெண் பெயரை வைத்து கொண்டு பெண்களை பற்றி அவமரியாதையாக பேசிவருகிறார். இனிமேல் அவர் ரவி என்று தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம், என விஷால் தெரிவித்துள்ளார்.

share