விஷால் ஒரு குளத்து ஆமை -நடிகர் ராதாரவி தாக்கு!



நடிகர் விஷால் ஆர் கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவது அனைவரும் அறிந்த ஒன்று தான். 

விஷால் தயாரிப்பாள சங்கத்தில் தலைவராக இருக்கிறார். அவர் ஆர் கே நகரில் சுயேட்சையாக போட்டியிடுவதால் தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகர் ராதாரவி மற்றும் ராதிகா சேரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ராதாரவி பேசும்போது, ‘விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி; நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அதை கெடுத்துவிடுவார்.

நான் எதிர்க்கும் அளவிற்கு விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.” என்று கூறியுள்ளார். 

share