Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷாலின் அயோக்கியா டீஸர்

விஷாலின் அயோக்கியா டீஸர்

A.R.முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனர் வெங்கட் மோஹன் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் மற்றும் ரஷி கண்ணா இணைந்து நடிக்கும் ஆக்ஷன் படம் அயோக்கியா. இவர்களுடன் பார்த்திபன் , K.S.ரவிக்குமார், சுமன், சச்சு,வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கி ஜூனியர் NTR மற்றும் காஜல் அகர்வால் நடித்த டெம்பர் படத்தை அதிகாரபூர்வமாக  ரீமேக் செய்கிறார்கள் அது தான் அயோக்கியா இந்த படத்திற்கு SAM.C.Sஇசை அமைக்க , லைட் ஹவுஸ் மூவி மாகேர்ஸ் தயாரிக்க இதன் முதல் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியானது.

அதில் பீர் பாட்டில் உடன் விஷன் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்திற்கு PMK தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் படக்குழுவினர் அயோக்கியா திரைப்படத்தின் டீஸர் நாளை இணையத்தில் வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Read More about :

share