விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காவல் ஆணையத்தில் புகார்!



நடிகர் விஷால் மீது சென்னை பெருநகர காவல் ஆணையத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தொலைப்பேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்னை காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், தான் இயக்கி வரும் புதிய திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் நடிகர் விஷால் வீணாக அவதூறு பரப்பி வருகிறார் என்றும் சுரேஷ் காமாட்சி விஷால் மீது குற்றம்சாட்டியுள்ளார். 

share