Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷால் முதல் அமைச்சருக்கு நன்றி

விஷால் முதல் அமைச்சருக்கு நன்றி

மாட்டு வண்டி போகாத ஊருக்கெல்லாம் பாட்டு வண்டி ஓட்டியவர்  நம் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இந்திய திரைவானில் தனக்கென தனி இடம் பிடித்து என்றும் ராஜாவாக திகழ்பவர் நம் இசை ஞியானி இளையராஜா.

அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் இரண்டு நாட்கள் விழா நடந்து முடிந்தது.இந்த விழாவில் சினிமா உலகின் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்,தயாரிப்பாளர்கள் யாவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இன்றைய தினம் விஷால் அந்த விழா சிறப்பாக நடைபெற்றதன் பொருட்டுமுதல் அமைச்சர் விழாவிற்கு அனுமதி கொடுத்து பாதுகாப்பு வழங்கியதற்காக  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில் A.R.ரகுமான் மற்றும் இளையராஜா மேடையில் இனைந்து பாட காரணமாக ஏற்பாடுகள் செய்த பார்த்திபனுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் விஷால்

Read More about :

share