Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஹாலிவுட் செல்ல இருக்கும் ராட்சசன்

ஹாலிவுட் செல்ல இருக்கும் ராட்சசன்

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு, அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் 'ராட்சசன்' திரைபடத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு,அமலாபால், ஜிப்ரான், ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியபோது, 'தன்னுடன் 'உத்தம வில்லன்' படத்தில் பணிபுரிந்த வெளிநாட்டை சேர்ந்த மியூசிக் மிக்சிங் கலைஞர்கள் 'ராட்சசன்' திரைப்படத்தின் ஆங்கில உரிமையை பெற யாரிடம் அணுக வேண்டும் என்று கேட்டதாக கூறினார். எனவே விரைவில் இந்த படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

'ராட்சசன்' படத்தின் மிகப்பெரிய வெற்றி அதன் திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் தான். ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உள்ள இந்த படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட்டால் நிச்சயம் சர்வதேச கவனத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share