Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'விஸ்வாசம்' படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; அஜித் செய்த உதவி

'விஸ்வாசம்' படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; அஜித் செய்த உதவி

அஜித்தின் விஸ்வாசம் படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி படவுலகினரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. 
இந்த நேரத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. நடன கலைஞர் சரவணன் என்பவர் படப்பிடிப்பில் வாந்தி எடுத்துக் கொண்டு ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அவரின் உடல்நிலையை பார்த்த படக்குழு ரெஸ்ட் எடுக்க கூறியுள்ளனர், நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமானதால் அஜித் மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளார். 
ஆனால் ஓ.எம். சரவணன் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மனம் உடைந்த அஜித் சுமார் 3 மணிநேரம் மற்ற நடன கலைஞர்களுடன் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார். பின் சரவணனின் உடலை பூனேவில் இருந்து சென்னை கொண்டு வர அஜித் ரூ. 8 லட்சத்திற்கு செலவு செய்துள்ளாராம்.

Read More about :

share