விவேகம்: இது போதும் ’தல’.... ஆனந்த கண்ணீரை பொழியும் அஜித் ரசிகர்கள்...!!


தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு இரவு வெளியானது. ரசிகர்கள் இதனை ட்விட்டரில் பெரிய திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். 

ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்துள்ளனர். காரணம் அஜித்தின் ’ஜிம்’ உடற்கட்டு மட்டுமே. எப்படி இருந்தவர் இப்படி ஒரு அசத்தலான லுக்கோடு களம் இறங்கி அனைவரையும் மிரட்டியுள்ளார் அஜித்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரால் அஜித் ரசிகர்கள் பலர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். பலர், முதலில் பர்ஸ்ட் லுக்கை பார்த்ததும் ஆனந்தத்தில் கண்ணீரை சிந்தியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது விவேகம். 

share