அஜித்தின் கட்டுடல் உடம்பிற்கு காரணம் யார் தெரியுமா..??



அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ கே 57’ படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரவு 12 மணியளவில் வெளியானது. படத்தின் பெயர் ‘விவேகம்’ என வைத்துள்ளனர் படக்குழுவினர். 

'விவேகம்' படத்தில் அவர் ஒர் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால் அவரது உடல் எடையை முற்றிலும் மாற்றும் பொறுப்பை இயக்குனர் சிறுத்தை சிவா 'யூசூப்' என்ற பிட்னெஸ் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அவருடைய தீவிரமான முயற்சி, அஜித் அவருக்கு கொடுத்த அபாரமான ஒத்துழைப்பின் அடையாளமே இன்று நீங்கள் பார்க்கும் அட்டகாசமான அஜித்தின் 'விவேகம்' படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் தோற்றம்.

இந்நிலையில் இதுகுறித்து ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யூசூப் தனது சமூக வலைத்தளத்தில் கூறுகையில், 'அஜித்தின் உடல்தகுதி மாற்றும் பயணத்தில் நானும் உடன் இருந்தேன் என்று கூறுவதில் எனக்கு பெருமை. மேலும் 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் எனது பெயரை போட்டு எனக்கு மரியாதை கொடுத்த இயக்குனர் சிவாவுக்கும் படக்குழுவினர்களுக்கும் எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார்.

share