பாகுபலி
படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும்
காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது.
பிரபாஸ்,
அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போவதாக
அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.
எனக்கு
பிரபாஸை மிகவும் பிடிக்கும். அவரும்,
அனுஷ்காவும் ஸ்டார்கள், ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.
என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ்
போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் அவர்கள் இருவரும் நல்ல
நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை.
அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை
நிறுத்துங்கள் என்று அனுஷ்காவின் அம்மா
தெரிவித்துள்ளார்.