Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாகி இருந்தவர்கள் கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் ரசித்து பார்த்ததே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றாக இருந்தது.

இந்த நிலையில் 'பிக்பாஸ் 2' வரும் 17ஆம் தேதி முதல் தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் யார் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேர் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இவர்கள் 7 பேர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. வடிவேல் பாலாஜி, சினேகா, ரியாஸ்கான், ரியோ ராஜ், நடிகை ரம்பா, கலக்க போவது யாரு' புகழ் பாலா, நடிகர் கிருஷ்ணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் வெளிவந்துள்ளது.

மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது உண்மையில் நிகழ்ச்சி தொடங்கும் தினத்தன்றே அதிகாரபூர்வமாக தெரியவரும்

Source : Indiaglitz



Read More about :

share