Kollywood News

  • Home/
  • Cine News/
  • தர்பார் படப்பிடிப்பில் இணைந்த இளம் நடிகை!

தர்பார் படப்பிடிப்பில் இணைந்த இளம் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம்.

ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

மேலும் தர்பார் படத்தில் நிவேதா தாமஸ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் நயன்தாராவை தொடர்ந்து நிவேதாவும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More about :

share