12 12 1950 படம் விமர்சனம்



கோல்மால் என்ற படத்தை இயக்கி, நடித்த செல்வா, தீவிரமான ரஜினி ரசிகர். அவரது பிறந்தநாளான 12.12.1950 என்ற தேதியை தலைப்பாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 

கதைப்படி தீவிர ரசிகரான கபாலி செல்வா ஒரு குங்பூ மாஸ்டர். இவர் இருக்கும் ஏரியாவில்  லோக்கல் கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா தள்ளிவிடும் போது எதிர்பாராத விதமாக கம்பியில் விழுந்து கவுன்சிலர் இறந்துவிடுகிறார். இதனால் கபாலி செல்வா ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்கு செல்கிறார்.

இந்த நிலையில் அவரால் வளர்க்கப்பட்ட நான்கு இளைஞர்கள், ரஜினியின் ‘கபாலி’ படம் வெளியாவதை முன்னிட்டு முதல் காட்சியை, தங்களது மாஸ்டரான கபாலி செல்வாவை பார்க்க வைத்துவிட வேண்டும் என்றும், அதோடு சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்திக்க வைத்துவிடவேண்டும் என்றும்.  

அவரை பரோலில் எடுத்து இந்த ஆசைகளை நிறைவேற்ற பார்க்கிறார்கள் அந்த நால்வர்.  

அவர்களால் மாஸ்டரை படம் பார்க்க வைக்க முடிந்ததா..? சூப்பர் ஸ்டாரையும் பார்க்க வைக்க முடிந்ததா... ?? என்பதே படத்தின் மீதிக் கதை. 

 
இந்தப்படத்தில் ரஜினி ரசிகராக நடித்த கபாலி செல்வா, கபாலி படத்தில் வரும் ரஜினி கெட்டப்பிலே நடித்து இருக்கிறார். தான் ரஜினி ரசிகரானது எப்படி என்று சொல்லும்போது உணர்வு பூர்வமாக நடித்துள்ளார். 

நான்கு இளைஞர்களாக வரும் ஆதவன், ரமேஷ் திலக், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன் ஆகியோர் ரஜினி ரசிகர்களாகவும் அதே நேரம் தங்களது மாஸ்டரின் ஆசையை நிறைவேற்ற கஷ்டப்படுபவர்களாகவும் நன்றாக நடித்துள்ளனர்.

 தம்பி ராமையா, யோகி பாபுஇருவரின்  காமெடி அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன.  


கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும், கதையை இன்னும் விறுவிறுப்பாக கொண்டு செல்வதிலும் தவறியிருக்கிறார்கள். 

12-12-1950 - ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது....

Rating :

0 1 2 2.4/5
share