Movie Reviews

  • Home/
  • Reviews/
  • 24 படம் விமர்சனம்

24 படம் விமர்சனம்



1990ல்  படத்தின் கதை ஆரம்பமாகிறது. இரட்டை சகோதரர்களாக வருகின்றார் சூர்யா. அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தம்பி சூர்யா(சேது ராமன்) கண்டுபிடித்த Project 24 என்ற வாட்சை அடைய முயற்சிக்கிறார். இதற்காக தம்பி சூர்யாவையும் (சேதுராமன்) தம்பி மனைவியாக வரும் நித்யா மேனனையும் கொன்று விடுகிறார் அண்ணன் சூர்யா(ஆத்ரேயா).

ஒரு கட்டத்தில் சேதுராமனின் குழந்தையையும், Project 24 வாட்சையும் அடைய முடியாமல் ஒரு விபத்தில் கோமா நிலைமைக்கு சென்று விடுகிறார் ஆத்ரேயன். 26 வருடங்களுக்கு பிறகு ஆத்ரேயாவின் கோமா நிலை சரியாக, சேதுராமனின் குழந்தையும் வளர்ந்து மற்றொரு சூர்யாவாக(மணி) வர, பின் நடக்கும் அதிரடியான களம் தான் இந்த 24. தன் தாய், தந்தையை கொன்ற பெரியப்பா சூர்யாவை(ஆத்ரேயன்) மகன் சூர்யா(மணி) பழி வாங்கினாரா??? அல்லது ஆத்ரேயன் கையில் அந்த வாட்ச் சிக்கியதா??? என்பதே படத்தின் மீதிக் கதை...

சூர்யா சூர்யா தான்... தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்கிறார். சேதுராமனாக வரும் அப்பாவி சூர்யாவாக இருக்கட்டும், மகன் சூர்யா(மணி) தனது வெகுளித்தனமான நடிப்பை வெளிக்காட்டுவதிலும் சரி, வில்லனாக வந்து மிரட்டும் சூர்யாவாக (ஆத்ரேயா) இருக்கட்டும் மூன்று விதமான ரோல்களில் தனது நடிப்பை செவ்வனெ பூர்த்தி செய்திருக்கிறார்.

இயக்குனர் விக்ரம் கே குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் சூர்யாவைத் தவிர வேறு யாராலும் இந்த கதை சாத்தியமில்லை என்று கூறியிருந்தார். அது உண்மையும் கூட நிஜமாகவே இந்த கதை சூர்யாவைத் தவிர வேறு நடிகர் ஒருவரை வைத்து யூகிக்கக் கூட முடியாத ஒன்று தான். ஆத்ரேயாவின் மிரட்டல் காட்சிகள் மிரள வைக்கின்றன. வீல் சேரில் இருந்து தனது வில்லத் தனததை காட்டும் போது தனது வேகத்தை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

ஒவ்வொரு பக்கமாக கதை ட்ராவல் செய்து நகரும் போதும் நம்மளையும் சேர்த்து நகர வைக்கிறது. ஒரு ஹாலிவுட் தரத்தில் கதையை உருவாக்கிய இயக்குனர் விக்ரம் கே குமாரை நிச்சயம் பாராட்டலாம். நான் ஒரு வாட்ச் மெக்கானிக் இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என சூர்யா திரும்ப திரும்ப கூறுவது எரிச்சலடைய வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் திரு வின் ஒளிப்பதிவில் கேமரா எங்கெங்கெல்லாமோ சென்று வந்திருக்கிறது.

1990 ல் ஆரம்பித்த கதை 2016 ஆம் ஆண்டு வரை வந்து மீண்டும் 1990 க்கே செல்கிறது. படத்திற்கு ஏற்ற இடங்கள், சமந்தா, நித்யா மேனன் என அனைத்தும் மிகவும் பொருத்தம். சமந்தா, நித்யா மேனனுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை என்றாலும் தங்களது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்கள். சமந்தா சோ க்யூட்.

பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் அப்ளாஷ் வாங்குகிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். காதல் காட்சிகளை படத்தில் திணித்தது போன்று தோன்றுகிறது. சின்ன சின்ன லாஜிக்குகள் ஆங்காங்கே உதைக்கின்றன. எனினும் சூர்யாவின் நடிப்பில் இவை ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

24 - கடிகாரத்தோடு நம்மையும் டிக் டிக் பயணம் புரிய வைக்கும். 

Rating :

0 1 2 3/5
share