Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஆண் தேவதை படம் விமர்சனம்

ஆண் தேவதை படம் விமர்சனம்

இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இன்று வெளியான படம் ஆண் தேவதை.

படம் எப்படி என்று பார்ப்போம்...

பெண் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவதால் வரும் விளைவுகள் கதையின் கரு

ஒரு நல்லதொரு குடும்பமாக சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன் மனைவி இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதில் தான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது. குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இரண்டு பேரில் ஒருவர் மட்டும் வேலைக்கு போவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

அதன்படி,  ரம்யா பாண்டியன் சாப்ட்வேர் என்ஜினீயராக தன் வேலையை தொடர்கிறார். சமுத்திரக்கனி வீட்டில் இருந்து உட்கார்ந்து குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கு வெளிநாடு போய் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதற்காக உயர் அதிகாரியின் உதவியை நாடுகிறார். அந்த உயர் அதிகாரி ரம்யா பாண்டியனை அனுபவிக்க துடிக்கிறார்.

அவர் கொடுக்கும் விருந்தில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்டு மது அருந்துகிறார். வீட்டுக்கு தள்ளாடியபடி வரும் ரம்யா பாண்டியனுக்கு சமுத்திரக்கனி புத்திமதி சொல்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம், சண்டையாக மாற சமுத்திரக்கனி மகள் மோனிகாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அதன்பிறகு ரம்யா பாண்டியன் என்ன ஆகிறார்? அவருடைய ஆடம்பர வாழ்க்கை எதில் போய் முடிகிறது? வீட்டை விட்டு வெளியேறிய சமுத்திரக்கனி மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா? என்பது மீதி கதை.

நடப்பு சமுதாயத்தில் நிகழும் சம்பவங்களை கருவாக வைத்துக் கொண்டு உயிரோட்டமான சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறார் தாமிரா.

படத்தின் 'ஆண் தேவதை' சமுத்திரக்கனி தான்.

Rating :

0 1 2 3 3.7/5
share