ஆறு அத்தியாயம் படம் விமர்சனம்



ஆறு குறும்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு முழுநீளத் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள் 6 இயக்குனர்கள்.

இவற்றை ஒவ்வொரு அத்தியாயமாக பிரித்து பிரித்து காண்பித்திருக்கிறார்கள். இவர்களின் முயற்சி ஜெயித்ததா என்பதை பார்த்து விடலாம்.

படத்தின், முதல் அத்தியாயமாக ‘சூப்பர் ஹீரோ’ என்ற டைட்டிலுடன்...

தன்னை ஒரு வித்தியாசமான மனிதனாக நினைத்துக் கொள்ளும் ஒரு இளைஞன், எந்த ஒரு இடத்திலும் தவறு நடந்தால் அதை முன்கூட்டியே அறிந்து அந்த தவறு நடக்கும் முனா தான் தடுத்ததால் தான் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என கூறி வருகிறார். 

அவரை அனைவரும் மனநிலை பாதித்தவர் என நினைக்க, அவருக்குள் இருக்கும் விசித்திரமான குண செயலை ஒரு மன நல மருத்துவர் கண்டுபிடிக்க, அந்த விசித்திரமான குணம் மருத்துவரின் விபரீத சோதனைக்கு பயன்பட்டதா இல்லையா என்பதே மீதிக் கதை...

இரண்டாவது அத்தியாயமாக ‘இனி தொடரும்’...


வீட்டில் தனியாக இருக்கும் ஒரு இளைஞனை ஒரு சிறுமி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். ஏன் அந்த இளைஞனை பயமுறுத்துகிறாய் என ஒரு பெண் கேட்க, அந்த இளைஞன் தன்னை கெடுத்து கொன்று விட்டதாக அந்த சிறுமி கூறுகிறாள்.

இதனால் கோபமுற்ற அந்த பெண், அந்த சிறுமியுடன் சேர்ந்து அந்த இளைஞனுக்கு கொடுக்கும் தண்டனையே படத்தின் க்ளைமேக்ஸ்

மூன்றாவது அத்தியாயமாக ’மிசை’...

மூன்று நண்பர்களோடு வசித்து வரும் கதையின் நாயகன், தன்னுடைய காதலியிடம் தனது காதலை கூற செல்கிறார்.

அவனுடைய காதலை அந்த பெண் மறுத்துவிட, மனம் நொந்து தனது ரூமிற்கு வரும் அவன், தனது நண்பர்களின் செயல்பாட்டால் மனம் உடைந்து போகிறான்... அதன் பிறகு ஏற்படும் கதையின் டுவிஸ்ட் க்ளைமாக்ஸ்

நான்காவது அத்தியாயமாக ‘அனாமிகா’....

சென்னைக்கு வெளியே வெகுதூரத்தில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு வரும் படத்தின் நாயகன், அந்த வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த வீட்டில் நடக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளே படத்தின் மீதிக் கதை...

ஐந்தாவது அத்தியாயமாக ‘சூப் பாய் சுப்பிரமணி’....

இந்த கதையின்படி நாயகன் எந்த பெண்ணிடம் பேசினாலும், ஏதாவது ஒரு இன்னல்களை கொடுத்து அந்த பெண்ணிடம் இவனை அடிவாங்க வைத்து விடுகிறது கண்ணுக்குத் தெரியாத அந்த பேய்...

இதைத்தீர்க்க ஒரு மந்திரவாதியிடம் செல்லும் நாயகன், யார் அந்த பேய்.?? எதற்காக அது நாயகனை துரத்துகிறது..?? என்பது படத்தின் சரவெடி காமெடி க்ளைமேக்ஸ்

ஆறாவது அத்தியாயமாக ’சித்திரம் கொல்லுதடி’....

ஓவியத்தில் தன்னை வல்லவனாக நிரூபித்து வரும் ஒரு இளைஞன், ஒரு அழகு பெண்ணின் ஓவியத்தை வரைய முற்படுகிறான். 

அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகத்தை படித்து அதில் வரும் பெண்ணிற்கு உருவம் கொடுக்க முற்படுகிறான் அந்த இளைஞன்.. இதனால் அவனுக்கு ஏற்படும் இன்னல்களே படத்தின் மீதிக் கதை...


அனைத்து படத்தின் கதாபாத்திரங்களையும் செம்மையாக வேலை வாங்கியுள்ளனர் ஆறு இயக்குனர்களும்...

ஒரு சில அத்தியாயங்களே மட்டுமே இதில் எடுபட்டுள்ளது.... 


6 அத்தியாயம் - 6 அத்தியாயங்களில்  2 நல்ல மார்க்குகளும், 3 தேர்ச்சியும், ஒன்று தோல்வியும் அடைந்துள்ளன... (எந்தெந்த அத்தியாயம் தேர்ச்சி, தோல்வி என்பதை நீங்களும் ஒருமுறை திரைக்கு பார்த்து சென்று முடிவு செய்து கொள்ளலாமே) 




Rating :

0 1 2 2.5/5
share