ஆயிரத்தில் இருவர் படம் விமர்சனம்



அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண், கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு  ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். 

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் வினய். சிறு வயதில் இருந்தே அடித்துக் கொள்ளும் சகோதரர்களாக வினய் & வினய். 

அதில் ஒருவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப் போய் ஹைதராபாத்தில் செட்டில் ஆக்னா, குடும்பத்தினரோ அவர் இறந்து விட்டதாக கருதுகிறார்கள்.  இன்னொரு வினய் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை தன் பேருக்கு மாற்ற முயற்சிக்கிறார்.

இதை அறிந்ததும் திருநெல்வேலியில் உள்ள வினய்யை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு ஹைதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து சொத்துக்களை கைப்பற்ற வருகிறார் மற்றொருவர். ஒரு கட்டத்தில் வெளிநாடு சென்ற வினய்க்கு இந்த செய்தி தெரிய வர அதன் பிறகு இருவரும் ஆடும் ஆட்டமே இந்த ‘ஆயிரத்தில் இருவர்’.

இரண்டு வினய் கேரக்டர்களையும், சுவாரஸ்யப்படுத்த முயன்றுள்ளார் இயக்குனர் சரண். வினய்யும் கொடுத்த வேலையை (மட்டும்) சரியாக செய்துள்ளார். நாயகிளாக வரும் ஸ்வஸ்திகா, சாமுத்ரிகா இருவரும் கவர்ச்சியும் , இளமை துள்ளலுமான ஒரு நடிப்பு.

படத்தின் கதைக்களம் பெரிதாக அளவெடுக்கவில்லை. காமெடி கலந்த ரவுடிக் கும்பலான அருள்தாஸ் அன் கோ சிரிப்பிற்கு கேரண்டி.. தனது தந்தையின் சாவுக்கு பழி தீர்க்க இவர்கள் செய்யும் அலப்பறைகள் இரண்டாம் பாதியை சலிப்பில்லாமல் கொண்டு சென்றிருக்கிறது. 

சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. பாடல்களில் காதை பதம் பார்த்து விடுகின்றன. பின்னனி இசை பயணம்....

கதைகளைத்தை கொஞ்சம் வலு சேர்த்து களம் இறங்கி அடித்திருக்கலாமே சரண் சார்..... இயக்குனர் சரண் படம் என்று நம்பி வரும் ரசிகர்களுக்கு சற்று சறுக்கலான ஏமாற்றம் தான்...
 

Rating :

0 1 2 2.5/5
share