Movie Reviews

  • Home/
  • Reviews/
  • அச்சம் என்பது மடமையடா படம் விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா படம் விமர்சனம்



சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து மீண்டும் அதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ உருவாகியிருப்பதால் இதன் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

எஞ்சினியரிங் மற்றும் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு  வீட்டில் ஜாலியாக இருக்கும் சிம்புவிற்கு நிதானமாக வேலையில் சேரலாம் என்பது எண்ணம். இந்தநிலையில் தான் தங்கையின் தோழியாக வருகிறார் மஞ்சிமா மோகன். 

அவரை பார்த்ததும் அவர் மேல் காதல் வயப்படுகிறார் சிம்பு. தென்னிந்தியா முழுவதும் பைக்கில் வலம் வர வேண்டும் என்பது சிம்புவின் ஆசை. அந்த டூர் கிளம்பும்  போது தானும் வருவதாக கூறி சேர்ந்து கொள்கிறார் மஞ்சிமா. அந்த டூரில் காதல் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகிறது.

டூரை முடித்து பைக்கில் மஞ்சிமாவை வட மாநிலத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு விடுவதற்கு செல்கிறார் சிம்பு. வழியில் இருவரும் விபத்தில் சிக்குகிறார்கள். பலத்த அடிபட்ட சிம்புவுக்கு நினைவு திரும்ப, மஞ்சிமா அவரது ஊருக்கு சென்றிருப்பதும் அங்கு அவரது பெற்றோர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரியவருகிறது.

தான் காதலிக்கும் பெண்ணிற்கு பிரச்சனை என அறிந்து ஊரிலிருந்து தனது நண்பன் சதீஷை வரவழைத்து அவருடன் மஞ்சிமாவை தேடி செல்கிறார். மஞ்சிமாவையும் அவரது பெற்றோரையும் கொலைகார கும்பல், போலீஸ் உதவியுடன் கொல்வதற்காக துரத்துகிறது. அவர்கள் யார், மஞ்சிமா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவது ஏன், இந்த தாக்குதலில் இருந்து சிம்பு அன் கோவால் தப்பிக்க முடிந்ததா என்பது தான் மீதிக்கதை.

முதல் பாதியில் காதல் கதையாக ஆரம்பித்து பாடல்கள் அனைத்தையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார் இயக்குநர்.முதல் பாதி மிகவும் மெதுவாகவும், இனிமையாகவும் சென்றாலும் , இரண்டாம் பாதியின் வேகத்தை டாப் கியர் போட்டு தூக்கி அடித்திருக்கிறார்கள். சிம்புவிற்கும் காதல் கதைக்கும் எப்படிபட்ட ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த ஈர்ப்பினை இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். 

காதலுக்கும் சிம்புவிற்குமான ஒரு புரிதல் இந்த படத்தில் அருமையான ஒரு ஓட்டத்தை கொடுத்துள்ளது. காதல் கதையாக ஆரம்பித்து போகப்போக அதிரடி ஆக்சன் ரூட்டிற்கு தாவியுள்ளார் கௌதம் மேனன். அவரது வேகத்திற்கு சிம்புவும் நன்றாகவே ஈடுகொடுத்திருக்கிறார்.. மஞ்சிமாவை நினைத்து காதலில் உருகுவதாகட்டும், அவருக்கு ஆபத்து என்றதும் பொங்கி எழுந்து எதிரிகளை புரட்டுவதாகட்டும் சராசரி ஒரு இளைஞனின் வெளிப்பாடாக தான் தோன்றுகிறது.

மஞ்சிமா மோகன் திரையில் ஒரு அழகு தேவதையாக வலம் வருகிறார். தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் ஐயமில்லை. சிம்புவின் நண்பனாக வரும் சதீஷ் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் இருந்து சதீஷிற்கு ஒரு முன்னேற்றமான பயணம் காத்திருக்கிறது.

வேட்டையாடு விளையாடு படத்தில் பார்த்த அதே டேனியல் பாலாஜியின் மிரட்டலை இந்த படத்திலும் காணலாம். ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடித்து விட்டது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.

கெளதம் மேனனின் பயணத்தில் இப்படியும் ஒரு திரைக்களம் வருமா என்ற கேள்விக்கு அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளை பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கடைசி ஐந்து நிமிடத்தில் திணித்து இருப்பது கொஞ்சம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....ப்ப்ப்பா... மற்றபடி லவ், ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்..

அச்சம் என்பது மடமையடா -  ’ஆக்‌ஷனோடு கலந்த ஒரு காதல்’

Rating :

0 1 2 3/5
share