அண்ணாதுரை படம் விமர்சனம்



விஜய் ஆண்டனின் முதல் முறையாக இரண்டு வேடமேற்று நடித்துள்ள படம் தான் இந்த ‘அண்ணாதுரை’.

கண்முன்னே தனது காதலி விபத்தால் இறந்து போனதால் அவளை நினைத்து தினமும் குடித்து, அதிகமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் அண்ணாதுரை. இருந்தாலும் உதவி என்றால் முதல் ஆளாகவும், தப்பை தட்டிக் கேட்கும் நல்லவனாகவும்தான் இருக்கிறார் இந்த  அண்ணாதுரை.

மறுபக்கத்தில் தம்பிதுரை பி.டி. மாஸ்டராக ஒரு பள்ளியில் பணிபுரிகிறார். அமைதியான குணம் படைத்தவராக வருகிறார். வீட்டில் டயானா சாம்பிகாவை  என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. 

அண்ணாதுரை திருந்தி குடிப்பழக்கத்தை விட எண்ணுகிறார். கடைசியாக ஒருநாள் மட்டும் குடித்துவிட்டு போக எண்ணுகிறார். அப்போது ஏற்படும் ஒரு விபத்தால் ஒருவர் உயிரிழக்கிறார். இதனால் அண்ணாதுரை 7 வருடம் சிறை வாசம் செல்கிறார்.

அண்ணாதுரை சிறைத்  தண்டனை முடித்து வெளியே  வரும்போது மிகப்பெரிய ரவுடியாக வந்து நிற்கிறார் தம்பிதுரை. சிறைக்கு சென்ற 7 வருடத்தில் அங்கு நடந்தது என்ன..?? என்பதை மிகவும் பரபரப்போடும் கூறியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.

அண்ணன், தம்பி என இரு வேடங்களை மிக கச்சிதமாக நடித்து முடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இரு கதாபாத்திரத்திற்கு உயிர் வேற்றுமையை காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனின் சார்...மேலும், இப்படத்தில் படத்தொகுப்பு, இசை இரண்டையும் இவரே மேற்கொண்டுள்ளார். ஜி எஸ் டி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.  பின்னனி இசையிலும் மிரட்டி எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 

டயானா சாம்பிகாவிற்கு இதுவே முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். மேலும், ஜுவல் மேரி, ராதாரவி, நளினி காந்த், காளி வெங்கட், ரிந்து ரவி, சேரன் ராஜ், டேவிட் என அனைவரும் தங்கள் பணிகளை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். 

முதல் பாதியில் அமைதியாகவும் இரண்டாம் பாதியில் அதகளமும் காட்டி மிரட்டி எடுக்கிறார் விஜய் ஆண்டனி. அண்ணன், தம்பி கதை ஆள்மாறாட்டம் என பல வந்தாலும் இது சற்று வித்தியாசமான ஒன்று தான். 

முதல் பாதியில் சுறுசுறுப்பாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் சற்று இழுத்துக் கொண்டு செல்வது சற்று பொறுமையை சோதிக்கிறது.

மற்றபடி அண்ணாதுரை - டபுள் டமாக்கா தான்... 

Rating :

0 1 2 3/5
share