Movie Reviews

  • Home/
  • Reviews/
  • அரண்மனை 2 - படம் விமர்சனம்

அரண்மனை 2 - படம் விமர்சனம்


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறிது பிரம்மாண்டமாக உருவாக்கிறார் “அரண்மனை 2”வை.  

விமர்சனம்:

அரண்மனையில் ஜமீனாக வாழ்ந்து வரும் ராதாரவி தனது மகன் சித்தார்த்திற்கும், த்ரிஷாவிற்கும் நடக்கவிருக்கும் கல்யாண வேலைகளை பார்த்து வருகிறார். அப்போது ஏதோ ஒரு பயங்கரமான அமானுஷிய சக்தி ராதாரவியை தாக்கி விட கோமாவிற்கு சென்று விடுகிறார் அவர். வெளியூரில் இருக்கும் சித்தார்த் மற்றும் அவரது சகோதரர் சுப்பு இருவரும் அரண்மனைக்கு வருகின்றனர்.

கோமாவில் இருக்கும் தனது தந்தை ராதாராவியை மீண்டும் அந்த அமானுஷிய சக்தி கொல்ல வருவதை பார்த்து விடுகிறார் சித்தார்த். அந்த சமயத்தில் எண்ட்ரீ ஆகிறார் சுந்தர் சி. இவர் வந்ததும் வழக்கம் போல் அரண்மனை படத்தில் என்ன செய்தாரோ அதே வேலையை செய்கிறார் இதிலும்.. அரண்மனை முழுவதும் கேமாரா பொருத்துவது தான்..

ஒரு நாள் இரவில் அண்ணன் சுப்புவை அந்த அமானுஷிய சக்தி இழுத்து சென்று விட, கேமராவில் பதிவாகி விடுகிறது அந்த உருவம். அந்த உருவத்தை உற்றுப் பார்க்கும் போது தெரிகிறது அது ஹன்சிகா என்று.

யார் இந்த ஹன்சிகா??? எதற்காக ராதாரவியின் குடும்பத்தை பழி வாங்க வேண்டும்?? என்பதே மீதி கதை.

அரண்மனை முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதையில் எந்த மாற்றமும் இல்லை என்றே கூறலாம். முதல் பாகத்தில் வினய் என்ன செய்தாரோ அதே வேலையை தான் செய்திருக்கிறார் சித்தார்த்தும்.

த்ரிஷாவின் நடிப்பு பேசப்படுகிறது. கவர்ச்சி பேயாக நடித்து மிரட்டுகிறார். ஹன்சிகா தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஒரு காட்சியில் அனைவரின் கண்களையும் கலங்கடித்து விடுகிறார் ஹன்சிகா. பூனம் பாஜ்வா சிறிது கவர்ச்சியை காட்டிச் சென்றாலும் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை.

இடைவேளை வரை காமெடி சிரிப்பூட்டவில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் காமெடி வெடிகளை சிதறவிடுகிறார் இயக்குனர் சுந்தர் சி. சூரி, கோவை சரளா, மனோபாலா இவர்களது காமெடி கூட்டணி அற்புதம். கோவைசரளா காமெடியில் ராணியாக வந்து கலக்குகிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் இரண்டு பாடல்கள் ரகம். குச்சி மிட்டாய் பாடல் எழுந்து ஆட்டம் போட வைக்கிறது. சாமி பாடல் ஒன்றிற்கு வந்து சாமியாட்டம் ஆடி செல்கிறார் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு. பின்னணி இசையை எங்கேயோ கேட்டது போல தோன்றினாலும் பயமுறுத்தும் காட்சிகளில் இசையை வைத்து பயமுறுத்திருக்கிறார் ஆதி... 

அரண்மனை படத்தின் அதே கதைதான் என்றாலும் திரைக்கதை அமைத்த விதத்தில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. காமெடியை பஞ்சமில்லாமல் கொடுத்திருக்கிறார்...அரண்மனை படத்தை ரசித்தவர்கள் கண்டிப்பாக அரண்மனை-2 யும் நிச்சயமாக ரசிப்பார்கள்...

 குடும்பத்தோடு அரண்மனை-2க்குள் சென்று வரலாம்...மிரட்டும்...


Rating :

0 1 2 3 3.6/5
share