அட்டு படம் விமர்சனம்



ஒரு வித்தியாசமான இசையில் அனைவரையும் இழுத்து, இந்த வாரம் எதிர்பாத்த படங்களில் ‘அட்டு’  முதலிடம் பிடித்து திரைக்கு வந்துள்ளது. இந்த அட்டு நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம். 

வட சென்னையில் குப்பத்து இளைஞனாக வருகிறார் கதாநாயகன் (அட்டு). அனாதையாக வளரும் அட்டு,  நான்கு நண்பர்களுடன் சேர்ந்து லோக்கல் தாதாவுடன் சில பல வேலைகளை செய்து தன்னை ஒரு ரவுடியாக அந்த ஏரியாவிற்குள் காட்டிக் கொள்கிறார் அட்டு. 

அதேபோல், பக்கத்து ஏரியாவில் கஞ்சா, போதை மருந்து சப்ளை என தனக்கென ஒரு கூட்டத்தை வளர்த்து வைத்திருக்கிறா ஜெயா. ஒருமுறை 3 கோடி மதிப்புள்ள போதை மருந்து தவறுதலாக அட்டுவின் கையில் சிக்குகிறது. 

இதனால் அட்டுவிற்கும் ஜெயாவிற்கு மோதல் முற்றுகிறது. அட்டுவையும் அவனது நண்பர்களையும் தீர்த்துகட்டி சரக்கை கைப்பற்ற பல வழிகளை மேற்கொள்கிறார் ஜெயா. இதற்கு நடுவில் சிறுவயதில் தன் மானத்தை காப்பாற்றியதற்காக நாயகி சுந்தரி அட்டுவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

கடைசியாக ஜெயாவிடமிருந்து அட்டு தப்பித்தாரா..?? நாயகி சுந்தரியின் கரம் பிடித்தாரா..?? நண்பர்களின் சூழ்ச்சி என்ன..?? என்ற சில கேள்விகளுக்கு கதை நகர நகர ஒவ்வொரு இடத்திலும் நமக்கு பதில் கிடைக்கும். அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அதிகமாகவே ட்விஸ்ட் கிடைக்கும். 


அட்டு - படத்திற்கு ஏற்ற ஒரு டைட்டில் தான். நாயகன் ரிஷி(அட்டு) கதாபாத்திற்கு ஏற்ற சரியான தேர்வு. தனது உடல் மொழிகளில் அவரது வருட உழைப்பு நன்றாகவே தெரிகிறது. புதுமுகம் என்ற ஒன்று ஒரு ப்ரேமில் கூட தெரியவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது. 

நாயகியான அர்ச்சனா அழகான கண்களுடன் கேமராவிற்கு ஏற்ற முகமாக வந்து செல்கிறார். பாடல் காட்சிகளில் மிகவும் அழகான ஒரு தோற்றம். 

நண்பர்களாக வருபவர்களில் யோகிபாபுவும், தீனாவும் மெயின். யோகிபாபுவின் காமெடி கலாட்டா சிரிக்க வைக்கிறது. தீனாவின் மாற்றங்கள் கைதட்ட வைக்கின்றன. 

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ஒளிப்பதிவு. அந்த குப்பை மேடுகளை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம். 

படத்தின் மற்றொரு பலம் என்றால் இசை. பாடல்களிலும் பின்னனி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார்  இசையமைப்பாளர் போபோ ஷசி. 

வட சென்னை தாதாக்களின் சில மறுபக்க முகங்களை இந்த படத்தில் காட்டியதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய கைதட்டலை கொடுத்துவிடலாம். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் இயக்குனரே. 

பல படங்களில் வந்த சில காட்சியமைப்புகள் ஆங்காங்கே இந்த படத்தில் எட்டி பார்த்ததை கவனித்திருக்கலாம். 

மொத்தத்தில் அட்டு சுமார் ரக ஹிட்டு.. 






Rating :

0 1 2 2.7/5
share