பயமா இருக்கு படம் விமர்சனம்
தான் காதலித்து திருமணம் செய்த ரேஷ்மியின் பிரசவ காலத்தில் மனைவியின் தாயாரும் இருக்க  வேண்டும் என்று ரேஷ்மியின் பெற்றோரை தேடி இலங்கை செல்கிறார் நாயகன் சந்தோஷ். 

சென்ற இடத்தில் இலங்கை போர் நடைபெற அங்குள்ள ராணுவத்தின் பிடியில் இருந்து  `நான் கடவுள்’ ராஜேந்திரன், பரணி, ஜீவா மற்றும் ஜெகன் ஆகியோரை சந்தோஷ் காப்பாற்றி தமிழகத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களை தன் வீட்டின் அருகிலேயே தங்க வைக்கிறார். 

இவர் வருவதற்கு முன்பே ரேஷ்மிக்கு குழந்தை பிறந்து விடுகிறது. தன் காதல் மனைவியுடனும், குழந்தையுடனும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாட்களைக் கழிக்கிறார் சந்தோஷ். 

திடீரென, தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக உணர்கின்றனர் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நால்வரும். அப்பேயை விரட்டுவதற்காக கோவை சரளாவின் உதவியை நாடுகின்றனர். பேயின் மிரட்டலில் சிக்கித் தவிக்கும் நால்வரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிய சந்தோஷை பேயிடமிருந்து காப்பாற்றும் போராட்டமே இப்படத்தின் கதை.

அன்பாக காதல் புரியும் கணவனாக சந்தோஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ரேஷ்மி அழகாகவும், அமைதியாகவும் அளவாகவும் பேசி மிரட்டியிருக்கிறார். காமெடிக்கென `நான் கடவுள்’ ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகன் மற்றும் கோவைசரளா என பலமான கூட்டணியிருந்தும் நகைச்சுவை காட்சிகளில் பலமில்லை.

பேய் வீட்டில் வரும் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறது.

பேய் படம் என்றாலே அழுத்தமான கதாபாத்திரம், ஆழமான திரைக்கதை என்று வழக்கமான பாணியில் இருக்கக்கூடாது என்பதற்காக இயக்குநரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான P.ஜவஹர் வித்தியாசமாக திரைக்களம் அமைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் C.சத்யா அழகான பேய் கதைக்கு ஏற்றவாறு மென்மையான இசையால் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் காமெடி மிரட்டல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. ரேஷ்மியின் அழகு ஆறுதல் ...

பேய் கதைக்கென நீருக்கு நடுவில் கட்டப்பட்ட வீடு சிறந்த தேர்வு. அதனை காட்சிப்படுத்திய விதமும் அருமை. க்ளைமாக்ஸ் காட்சிகள் கொஞ்சம் ஏற்புடையதாக இல்லை. 

பயமா இருக்கு – இன்னும் கொஞ்சம் பயம் காட்டிருக்கலாம்....

Rating :

0 1 2 2.5/5
share