புரூஸ் லீ படம் விமர்சனம்


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அப்பல்லோ வாசல், ஏடிஎம் வாசல், வாடி வாசல், என பல வாசல்களால் தள்ளப்பட்டு ஒரு வழியாக வெளியே வந்து விட்டது இந்த புரூஸ் லீ. ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.

நம்ம ஹீரோ கைக்கு பரிசாக ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் எதிர்பாராத விதமாக அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்யப்பட்ட புகைப்படம் பதிவாகிறது. கொலை செய்தவன் மிகப்பெரிய தாதா முனீஸ்காந்த். அந்த புகைப்படத்தை அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வழிகளில் தனது காதலியின் துணையுடன் போராடுகிறார் ஜி வி.

ஆனால், போகின்ற இடத்தில் எல்லாம் வில்லனின் கையாட்களே அதிகம் உள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படி போட்டா கையுமாக திரிவது முனீஸ்காந்திற்கு தெரிய வர, வில்லன் முனீஸ்காந்த், ஜி வி பிரகாஷின் காதலியையும், ஜி வி-யின் நண்பன் பால சரவணனின் காதலியையும் கடத்தி விடுகிறார். தங்களது காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை நாடுகின்றனர் ஜி வியும் பால சரவணனும்.

இறுதியில் வில்லன் கையில் இருந்து ஹீரோயின்களை ஹீரோ காப்பாற்றினாரா..?? இல்லையா என்பது படத்தின் க்ளைமாக்ஸ்.

வழக்கம் போல் ஜி வி-யின் நடிப்பை பற்றி கூற ஏதுமில்லை. முந்தைய படங்களில் நடித்ததை போலவே இந்த படத்திலும் லோக்காலிட்டி, குறும்பு என அதே பாணி தான். ஜி வி காதலியாக வரும் கீர்த்தி கர்பந்தா குல்பி ஐஸ் தான். கோடை காலத்து தாகத்தை தீர்க்க வந்த குளிர்ச்சி(கவர்ச்சி) புயல்.

ஹீரோவை கலாய்த்து தனது வேலையை சரியாக செய்திருக்கிறார் பால சரவணன். இந்த படத்தில் அவருக்கு ஒரு ஜோடி கொடுத்திருப்பது ‘லக்கி பாய்’.

காமெடி கதாபாத்திரத்தில் இருந்து வில்லனுக்கு ப்ரொமோட் ஆகியிருக்கிறார் முனீஸ்காந்த். வசனங்கள் படத்தில் அதிகம் பேசாவிட்டாலும் ஒரு மாதிரியான வில்லனாக தான் வலம் வருகிறார் முனீஸ்கான்ந்த். 

போலீஸ் அதிகாரி ஆனந்தராஜ், அமைச்சர் மன்சூர் அலிகானை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். 
 
பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு மட்டும் சிறிது ரசிக்க வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது.. பாடல்கள் எதுவும் மனதில் நிற்காமல் சென்று விடுகிறது. பல படங்களில் உலா வந்த கதை தான் பெரிதாக ஒன்றும் இல்லை. காமெடி வைத்திருக்கிறோம் என்ற பெயரில் நன்றாகவே வச்சு செய்திருக்கிறார்கள். 

ஜி வி பிரகாஷ் தனது வழித்தடத்தை மாற்றி வேறு வழியில் பயணிப்பது அவரது சினிமா வாழ்க்கைக்கு நல்வழிவகுக்கும். 

புரூஸ் லீ - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

Rating :

0 1 2 2.2/5
share