Movie Reviews

  • Home/
  • Reviews/
  • டார்லிங் 2: படம் விமர்சனம்

டார்லிங் 2: படம் விமர்சனம்


கடந்த வருடம்  “ஐ” படத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து நல்ல வெற்றியையும் பெற்ற படம் “டார்லிங்”. வசூல் ரீதியாக ஸ்டுடீயோ கிரீன் நிறுவனத்திற்கு நல்ல ஒரு ஹிட் கொடுத்த படம். இதன் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது டார்லிங் 2. புதுமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் விமர்சனத்தை பார்த்துவிடலாம்..

ஆறு நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களில் இருவர்கள் இரட்டையர்கள். இரட்டையர்களில் ஒருவர் தனது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்கிறார். இந்நிகழ்வு நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு ஐந்து நண்பர்களும் சந்தித்து வால்பாறைக்கு சுற்றுலா செல்கின்றனர்.

வால்பாறையில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்கள். அங்கு இறந்து போன நண்பனின் ஆவி உலாவுகிறது. நண்பர்கள் ஐந்து பேரின் ஒருவனுக்குள் அந்த ஆவி புகுந்து விட, நண்பன் ஒருவன் துரோகம் செய்துவிட்டதாகவும் அவனை கொலை செய்வதற்காகதான் தான் வந்ததாகவும் ஆவியாக வருபவன் கூறுகிறான்.. யார் அவன்??? எதற்காக கொலை செய்ய அந்த ஆவி துடிக்கிறது??? என்பதை பேய் ஆட்டமாக மீதிக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்...

கலையரசன், ரமீஸ், காளி வெங்கட், ஜானி ஹரி, ராம்தாஸ் இவர்கள் ஐவரும் தான் நண்பர்களாக வருகிறார்கள். ரமீஸ் இரட்டையர்களாக நடித்து மிரட்டுகிறார். கலையரசனின் நடிப்பு நலம். நாயகியாக வரும் மாயா பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் மிக அழகாகவும், ஒரு குழந்தைத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டியிருக்கிறார்.

காமெடி செய்வதற்கு படத்தில் நிறைய இடங்கள் இருந்தாலும், இயக்குனர் அதை ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. படத்தின் கதையிலும் பெரிதாக வலு இருந்ததாகவும் தெரியவில்லை. பேய்ப்படம் என்று சொல்லிவிட்டு சில இடங்களில் மட்டும் பேயை கண்ணில் காட்டுவது கொஞ்சம் எரிச்சலடைய வைக்கிறது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் தான். ரதனின் இசையில் இரண்டு பாடல்கள் ரகம். பின்னனி இசை ஒரு சில இடங்களில் மட்டும் வேலை காட்டுகிறது. சில இடங்களில் லாஜிக் இல்லாமல் நகர்வது ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

டார்லிங் 2 - மிரட்டல் போதாது...

Rating :

0 1 2 2.5/5
share