Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தேவ் படம் விமர்சனம்

தேவ் படம் விமர்சனம்

          தீரன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தேவ். இந்த படத்தின் தலைப்பை வைத்து இது கபில் தேவ் வாழ்க்கையாக இருக்கும் என்றெல்லாம் ஒரு சாரார் சொல்ல. நாம் படம் பார்க்க ஆரம்பித்த சில நொடிகளில் படத்தின் களம் வேறு என்பது நமக்கு தெளிவாக புரியும். கார்த்தியின் நடிப்பில் நல்ல மெருகேற்றம் இருந்தாலும் இந்த கதையை இப்பொழுது நடித்திருக்க வேண்டாம் என்பதே பலரது கருத்து.
 
         ரகுல் ப்ரீத் சிங் பணக்கார தொழிலதிபராக நடித்திருக்கிறார். இருவருக்குமான காட்சிகள் இயல்பாகவும் நன்றாகவும் உள்ளன. இருவருக்கும் இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்ற களத்தை வைத்து  புதுமுக இயக்குனர் ரஜத் பயணித்துள்ளார் இவர் அனுராக் காஷ்யப் இன் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

          பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் போன்ற ஜாம்பவான் நடிகர்களை வைத்துக்கொண்டும் அவர்களுக்கான இடத்தை படம் பூர்த்தி செய்யவில்லை. RJ. விக்னேஷ், அமிர்தா ஆகியோர் படத்தின் முதல் பாதியில் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றனர். படத்தில் வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. 2.30 மணி நேர படமானாலும் நிலையான கதாபாத்திர வடிவமைப்பு இல்லாததால் மக்களுக்கு படம் சற்று சலிப்பாகவே உள்ளது. 
தேவ் = தேவலாம் 
(2)

Rating :

0 1 2/5
share