Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தில்லுக்கு துட்டு 2 படம் விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 படம் விமர்சனம்

 நகைச்சுவை நடிகராக இருந்து இன்று ஹீரோவாக வலம் வரும் சந்தானம் நடித்துள்ள படம் தில்லுக்கு துட்டு 2.  சந்தானம் என்றவுடன் நமக்கு அவரின் நகைச்சுவை தான் நியாபகம் வரும். அனால் பின்னர் ஹீரோ ஆன பிறகு சரியான படம் சந்தானத்திற்கு அமையவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் தில்லுக்கு துட்டு 2 படத்தின் முதல் பாதி சற்றே தொய்வு காட்டுகிறது. கதையில் புதிய சாராம்சம் ஏதும் இன்றி பல படங்களில் நாம் பார்த்தவையாகவே உள்ளது. படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை மிக அருமையாக பொருந்தி உள்ளது. ஸ்லாப்ஸ்டிக் எனப்படும் நகைச்சுவை முறையை சந்தானம் கையாண்டுள்ளார்.

 நான் கடவுள் ராஜேந்திரன் இந்த படத்தில் மிக சிறந்த நகைச்சுவை விருந்து அளித்திருக்கிறார். நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான பங்கை சிறப்புற செய்துள்ளனர். சந்தானத்தின் உழைப்பு நமக்கு நன்றாக திரையில் தெரிகிறது. பேய் படம் ஆதலால் பின்னணி இசை மிக அவசியம் ஆயினும் இது பேயை கலைப்பது போல் கதை அமைந்து வித்யாசம் காட்டியிருப்பது சிறப்பு. ஷபீர் அவர்களின் இசையில் பாடல்களும் பின்னணியும் படத்திற்கு பலமே; டைரக்டர் ராம்பாலா இயக்கத்தில் லொள்ளு சபா முத்திரையை பதித்துள்ளார்.
தில்லுக்கு துட்டு2 =நகைச்சுவை விருந்து 
(2.55)

Rating :

0 1 2 2.5/5
share