Movie Reviews

  • Home/
  • Reviews/
  • எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் விமர்சனம்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் விமர்சனம்



கவுண்டமணியின் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ளது ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. பல வருடங்களுக்குப் பிறகு 49ஓ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் கவுண்டமணி. அதன் பிறகு இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு கேரவனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி. அவ்வப்போது காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்தும் வைக்கிறார்.  அப்படி ஒரு கட்டத்தில் தான் செளந்தர்ராஜன், ரித்விகா காதலுக்கு உதவி புரிகிறார் கவுண்டமணி. ரித்விகா வீட்டாரின் பகையை சம்பாதிக்கிறார் கவுண்டமணி. கடைசியாக செளந்தர்ராஜன், ரித்விகாவிற்கு திருமணம் செய்து வைத்தாரா இல்லையா..??? என்பதே படத்தின் மீதிக் கதை...

கவுண்டமணி - காமெடியிலும், கலாய்ப்பதிலும் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தின் மொத்த பகுதியையும் தனி ஒரு ஆளாய் தூக்கி செல்கிறார். நடிப்பில் தான் ஒரு மன்னன் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் வெளிக்காட்டுகிறார். படத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் கலாய்த்து விடுகிறார்.

சமூக போராளியாக வரும் செளந்தர்ராஜன், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியின் மாவட்ட தலைவரின் மகளாக வரும் ரித்விகா இருவருக்குமான காதல் காட்சிகளில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள். இருவர்களும் தங்களது யதார்த்தமான நடிப்பால் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

பல இடங்களில் சமூகத்தில் நடக்கும் உண்மை நிலவரங்களை கவுண்டரில் கவுண்டமணி அடிக்கும் காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பலைகளை எகிற வைக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஏனோ ரகம் தான்.

அருமையான ஒரு கதைக்களமாக இருந்தாலும் அதை திரைக்கதையாக மாற்றும் இடத்தில் இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். கவுண்டமணியின் அமர்க்களத்திற்காக ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - ஒருமுறை விசிட் அடிக்கலாம்...

Rating :

0 1 2 2.4/5
share