Movie Reviews

  • Home/
  • Reviews/
  • என்னோடு விளையாடு படம் விமர்சனம்

என்னோடு விளையாடு படம் விமர்சனம்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் தான் ‘என்னோடு விளையாடு’. முந்தைய காலத்தில் சென்னை கிண்டி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை ரேஸ் கோர்ஸ் க்ளப் தான். இந்த ரேஸ் கோர்ஸ் விளையாட்டினை மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது. எப்படி விளையாடியிருக்கிறார்கள் என்று பார்த்து வரலாம்.

ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் கணக்காளராக பணிபுரிகிறார் பரத். இவர் ஒரு குதிரைப் பந்தயப் பிரியர். பல வங்கிகளில் பல லட்சங்கள் எடுத்து அதை குதிரைப் பந்தயம் சூதாட்டத்தில் இழந்தவர். இவருக்கும் சாந்தினிக்கும் காதல்.

சாந்தினியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் உள்ள கடன் அனைத்தையும் கட்டியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் பரத். மேலும், தான் பணிபுரியும் ஆபிசிலும் கொள்ளையடித்த பரத், அதையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார் பரத்.

மற்றொரு பக்கம், கதிர் மற்றும் சஞ்சிதா ஷெட்டியின் காதல்.. சஞ்சிதா ஷெட்டிக்கு பண உதவி தேவைப்பட கதிர் அதற்கு முயற்சிக்கிறார். கதிரின் முயற்சி சஞ்சிதாவிற்கு உதவியதா..???

இந்த இரு ஜோடிகளுக்குள்ளும் நடக்கும் ஒரு விதமான விளையாட்டே இந்த ‘என்னோடு விளையாடு’ படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் ஸ்மார்ட்டாக, சரியான உடற்கட்டோடு வந்திருக்கிறார் பரத். காதல் காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சாந்தினிக்கும் பரத்துக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

அமைதியான பையனாக வரும் கதிர், இறுதியில் அதிரடி காட்டும் மிரட்டல் நாயகனாக வருவது சூப்பர். ஆங்காங்கே சின்ன சின்ன க்ளாமர் பகுதியை பூர்த்தி செய்ய சூப்பர் கேர்ளாக வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

ராதாரவி மற்றும் யோக் ஜேபி ஆகியோர் பணக்கார தோரணை வில்லனாக அதிரடி காட்டியுள்ளனர். குதிரைப்பந்தயம் வெறும் பந்தயமாக மட்டும் பார்க்காமல் அதில் பல பணக்கார முதலாளிகளின் கெளரவமும் அடங்கியுள்ளது என்பதை தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர்.

முதல் பாதியில் ஆமை வேக பயணத்தில் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் குதிரை வேகமாக மாறுகிறது.

ரேஸ் கோர்ஸ் க்ளப்பில் நடக்கும் குதிரைப் பந்தயத்தை சற்று கண் முன்னே கொண்டு வந்த இயக்குனர், அந்த குதிரைப் பந்தயத்தால் சில குடும்பங்கள் இன்று நடு ரோட்டில் வந்த கதையை ஒரு இடத்தில் கூட வைக்காதது ஏன் ...??? என இயக்குனருக்கு நச்சுனு ஒரு கேள்வி எழுப்பலாம்...

மோசஸ் இசையில் பாடல்கள் எதுவும் காதுகளில் நிற்கவில்லை. பின்னனி இசை ஓகே ரகம். யுவாவின் ஒளிப்பதிவிற்கு சூப்பர்.

என்னோடு விளையாடு - நேரம் போகவில்லை என்றால் இந்த விளையாட்டை பார்க்கலாம்...



Rating :

0 1 2 2.5/5
share