Movie Reviews

  • Home/
  • Reviews/
  • குலேபகாவலி படம் விமர்சனம்

குலேபகாவலி படம் விமர்சனம்


பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருப்பது தான் இந்த குலேபகாவலி

கதைப்படி பிரபுதேவா , ஹன்சிகா, ரேவதி மூவரும் தனித்தனியாக காரணங்களை கொண்டு திருட்டு தொழில் செய்து வரும் திருடர்கள். 1945ல் புதைக்கப்பட்ட ஒரு புதையலைத் தேடி எடுக்க செல்கின்றனர். அவர்கள் மூவருடன் முனீஸ்காந்தும் உடன் செல்கிறார். அந்த வைர புதையலை அந்த கும்பல் எடுத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவின் காமெடி, நடனம், காதல் காட்சி என அனைத்தையும் பார்க்க முடிந்தது. ஹன்ஸிகா காட்சிகளில் மிகவும் அழகாக வந்து செல்கிறார்.

 சீனியர் நடிகை ரேவதி படத்தின் பெரிய ரோலில் நடித்துள்ளார். அவர்களுக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார். முனீஸ்காந்த், ஆனந்தராஜ், யோகி பாபு , மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன் ஆகியோரின் கலாட்டா படத்தை மிகவும் கலகலப்புடன் செல்ல வைத்திருக்கிறது. 

முழுக்க முழுக்க பொழுது போக்கு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் காட்சியமைப்பு, வசனம் என்ற அனைத்தையும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர்.

ஆங்காங்கே சில பல லாஜிக் எல்லாம் உதைத்தாலும், மனம் விட்டு அனைத்தையும் மறந்து ஒரு சிரிப்பு உலகில் சென்று வர வேண்டும் என்றால் இந்த படத்திற்கு நிச்சயம் ஒரு விசிட் அடித்து வரலாம். 

விவேக், மெர்வின் இருவரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னனி இசை கதையோடு பயணம். 

ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு கலர்புல். 

குலேபகாவலி - பொங்கல் விடுமுறையை ஜாலியாக எடுத்துச் செல்லும்...





Rating :

0 1 2 3/5
share