ஹர ஹர மஹா தேவகி படம் விமர்சனம்


இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘ஹர ஹர மஹா தேவகி’. படத்தின் தலைப்பு அறிமுகமே புரிந்திருக்கும் ஒன்லி ஃபார் இளைஞர்கள் தான் என்று. அதேபோல் இந்த படத்தை யாரும் குடும்பத்தோடு பார்க்க வர வேண்டாம் என்று இயக்குனர் முன்னறிவிப்பு ஒன்றை முன்னரே வெளியிட்டார். 

சரி... அப்படி என்ன தான் படத்துல வச்சிருக்காங்கன்னு தான் பார்க்கலாமே...

கதைப்படி கெளதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து பிரிகிறார்கள். கடைசியாக அவரவர்கள் கொடுத்த கிப்டை திருப்பி கொடுப்பதற்காக ‘ஹர ஹர மஹா தேவகி’ எனும் ரெஸ்டாரண்டிற்கு வருகின்றனர். 

கட்சி பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வைப்பதற்காக மொட்டை ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் இருவரிடம் அந்த வெடிகுண்டை கொடுத்தனுப்பகிறார் ரவி மரியா. மொட்டை ராஜேந்திரன், கருணாக்ரன்,  கள்ள நோட்டு மாற்றும் பால சரவணன், என அனைவரும் அதே ரெஸ்டாரண்டிற்கு வருகின்றனர். அங்கு நடக்கும் சில பல காமெடி அரங்கமே  படத்தின் முடிவு....

கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி இருவருக்குமான ஹெமிஸ்ட்ரி மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆங்காங்கே தெரிக்கும் இரட்டை வசனங்கள் என்று கூட சொல்ல முடியாது நேரடியான டயலாக் தாக்கங்கள் தான். 

வசனங்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு மட்டுமே புரியும் படியாக அமைத்திருக்கிறார்.குடும்பமே, அல்லது பெண்களோ சகித்துக் கூட கொள்ள முடியாத வசன அமைப்பு தான் ஏராளம்.

இளைஞர்களின் பார்வையில்....

மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் இருவரது கூட்டணியில் காமெடி கலகலப்பூட்டுகின்றன. 

சதீஷ் காமெடிகள் கடுப்பேற்றுகின்றன. ஒளிப்பதிவில் செல்வகுமார் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

பின்னனி இசை ஓகே... பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. 

இளைஞர்களை மட்டுமே டார்கெட் வைத்து இந்த படத்தை எடுத்த இயக்குனர் அவர்களின் வெற்றிக்கனியை எட்டி பிடித்துள்ளார். 

ஹர ஹர மஹா தேவகி - இளைஞர்களுக்கான ஒரு கா(வி)யம்....

Rating :

0 1 2 2.7/5
share