Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஹலோ நான் பேய் பேசுறேன் படம் விமர்சனம்

ஹலோ நான் பேய் பேசுறேன் படம் விமர்சனம்


தற்போது நிலவும் தமிழ் சினிமாவை பொருத்தவரை கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு பல வெளிநாட்டு கதைகளை மையமாகக் கொண்டு அந்த கதையினை வைத்து படத்தினை இயக்குவதில் குறிக்கோளாக இருக்கின்றனர் இப்போதைய இயக்குனர்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பேய் கதைகள்... பேய் கதைகளுக்கு லாஜிக் எதுவும் தேவையில்லை.. இறந்து போன ஒருவரின் ஆத்மா உலாவ விட்டு, அந்த ஆத்மாவை மையமாக வைத்து சில பல காமெடி காட்சிகளை வைத்தால் சூடான ஹாரர் படம் ரெடி...இது தான் இப்போதைய ட்ரெண்ட்.... சரி நம்ம கதைக்கு போயிடலாம்..

விமர்சனம்:
பல மிரட்டலான பேய்க் கதைகளை கொடுத்த தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு மிரட்டலாக வந்திருக்கிறது “ஹலோ நான் பேய் பேசுறேன்”. திருடனாக எண்ட்ரீ கொடுக்கிறார் வைபவ். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த தருணத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரண்டு அண்ணன்கள் VTV கணேஷ் மற்றும் சிங்கப்பூர் தீபன். காதல் கனிந்து திருமணம் வரை செல்லும் போது, தான் திருடிய ஒரு மொபைல் போன் மூலம் பேயிடம் மாட்டிக் கொள்கிறார்.

 இவர்கள் போதாதென்று VTV கணேஷ், மற்றும் சிங்கப்பூர் தீபன் இருவரும் அந்த பேயிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த பேயிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்த ஒரு மிரட்டலாக கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் பாஸ்கர்.

திருடனாக வரும் வைபவ், தனது  குறும்புத்தனமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். பேயுடன் இருக்கும் போது அவர் காட்டும் நடிப்பிற்கு பாராட்டுகளை கொடுக்கலாம். பேயாக மாறும் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பில் சற்று மிரட்டுகிறார். படத்தின் ஆரம்பத்திலே வரும் யோகி பாபு சிரிப்பிற்கு பஞ்சம் வைக்காமல்  வயிறை பதம் பார்க்க வைத்து சென்று விடுகிறார். அவர் விடும் தருணத்தை VTV கணேஷ் மற்றும் சிங்கப்பூர் தீபன் பிடித்துக் கொள்கிறார்கள்.. இவர்களுடன் சேர்ந்து வைபவ் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்..

ஓவியாதான் படத்தில் பேயாக வருகிறார். இவர்கள் போதாதென்று சிங்கம்புலியும் தன் பங்கிற்கு வந்து அசத்திவிட்டுச் செல்கிறார். ஓவியாவின் காதலனாக வருகிறார் கருணாகரன். க்ளைமேக்ஸில் கருணாகரன் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”களை சாப்பிடும் காட்சிகள் சற்று மாறுபட்ட தீர்ப்பு தான் யுவர் ஹானர்..

படத்தில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகமாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். பின்னனி இசையிலும் மிரட்டியிருக்கிறார். பானுமுருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமே.. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் வேலைகள் சற்று படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

முதல் பாதியில் சிரிப்பலையில் அதிரும் அரங்கம், இரண்டாம் பாதியில் சற்று குறைந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் காமெடி தளத்திற்கு அதிகம் இடங்கள் இருந்தும் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.. பேயாக வரும் ஓவியாவிற்கே கெஸ்ட் ரோல் தான்பா கொடுத்துருக்காங்க... இப்போ எல்லாம் திருடனை பார்த்தா கூட டக்குனு லவ் வருது...அது தான் எப்படின்னு தெரியல...

குறும்பட இயக்குனருக்கு தகுந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர் சி க்கு பலத்த பாராட்டுக்கள்...

ஹலோ நான் பேய் பேசுறேன் - பேய் பேசுதோ இல்லையோ காமெடி பேசும்....

Rating :

0 1 2 3 3.2/5
share