Movie Reviews

  • Home/
  • Reviews/
  • இமைக்க நொடிகள் படம் விமர்சனம்

இமைக்க நொடிகள் படம் விமர்சனம்

சென்னை: சிபிஐ அதிகாரியாக களமிறங்கும் நயன்தாரா, சைகோ கொலைகாரனை பிடிக்கும், விஜய்சேதுபதியின் காதலே 'இமைக்கா நொடிகள்'.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் எனக்கு அசால்ட் தான் என கெத்து காட்டியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நம்ம நயன்தாரா. ஒரு பெண் குழந்தையின் அம்மா, தம்பிக்கு பாசமான அக்கா, கணவனுக்கு அன்பான மனைவி, சைக்கோ கொலைகாரனை கொள்ள துடிக்கும் சிபிஐ அதிகாரி என அனைத்து இடங்களிலும் பெர்பெக்டாக ஃபிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.

 இந்த படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப் தான். ஒவ்வொரு அசைவிலும் சைக்கோ ருத்ராவாக பயமுறுத்துகிறார். அதுவும் மகிழ்திருமேனியின் குரல் கனக்கச்சிதம். ஆரம்பம் முதல் இறுதி வரை நயன்தாராவையும், அதர்வாவையும் ஓடவைத்திருக்கிறார். நம்ம பாலிவுட் இயக்குனருக்கு தமிழில் இனி கால்ஷீட் பிரச்சினை வரும் போல.

 நயன்தாராவுக்கு சரிசமமாக தன்னுடையே வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார் அதர்வா. ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

கொஞ்ச நேரம் வந்தாலும் ஆக்டிங்கால் மனதை தொடுகிறார் விஜய் சேதுபதி. கருவறையில் இருக்கும் தனது குழந்தையுடன் பேசும் காட்சி... ' மனதை மயக்கிய' மக்கள் செல்வன்.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகி இருக்கும் புதுவரவு ராஷி கண்ணாவுக்கு தவுசண்ட் லைக்ஸ். அழகு தேவதையாக வந்து அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு காணாமல் போகிறார். உங்களுக்கும் கால்ஷீட் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு. இந்த படத்தின் இன்னொரு ஷோ ஸ்டீலர் குட்டிப்பாப்பா ஷாலு. செம க்யூட் பேபி.

நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, குட்டிப்பாப்பா ஷாலு என அனைவருக்கும் சமமான கேரக்டர்களை வடிவமைத்தவிதம் அற்புதம். ஆனால் அதன் காரணமாகவே படத்தின் நீளம் அதிகமாகிவிடுகிறது. அதே நேரத்தில் 'நியாயம் பேசுனா தேசத்துரோகியா', 'என்ன கொல்லப்போறியா அஞ்சலி' உள்ளிட்ட பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் சூழலை அழகாக கையாளுகின்றன.

ருத்ரா ஒரு பெரிய சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம். அதற்காக நேரடியாக தொலைக்காட்சிக்கு போன் செய்து அடுத்தக்கடத்தல் குறித்து லைவ் அப்பேட் செய்வது, ஒட்டுமொத்த மெட்ரோ ரயில்வவை ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப ஓவர்.

இருந்தாலும் படத்தை விறுவிறு குறையாக கொண்டு போறது ஹிப்பாப் தமிழா ஆதியின் பின்னணி இசையும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் தான். திரில், எமோஷன், காதல், வலி, பாசம் என கலவையான உணர்வை தருகிறது இருவரின் உழைப்பு.

எடிட்டரின் கத்திரி, இன்னும் கூட பல காட்சிகளை டிரிம் செய்திருக்கலாம். இப்போல்லாம் யாரு பாஸ் 3 மணி நேரம் படம் பார்க்குறாங்க.

 ஆனால் படத்தில் நிறைய டிவிஸ்ட்கள் இருப்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அதனால் நம் கண்களும் இமைக்க மறக்கின்றன. அப்புறம்.... 'சிங்கத்தின் இரையை தந்திரமாக பறிக்கும் கழுதைப்புலி'... இந்த படத்தில் அற்புதமான காட்சி.

Rating :

0 1 2 3/5
share