இந்திரஜித் படம் விமர்சனம்



தமிழ் சினிமாவில் முதல் முறையாக அட்வென்ஜர்ஸ் கதையாக உருவாகியுள்ளதுதான் இந்த இந்திரஜித். 

புதையலை தேடி அலையும் ஒரு கதை தான் இந்த ‘இந்திரஜித்’. பல வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து ஒரு கல் பூமியில் விழுகிறது. அந்த கல் பல மருத்துவ அதிசயங்களை கொண்டுள்ளது. 

அந்த கல்லை பயன்படுத்தினால் நோய் நோடியில்லாமல் 400 வருடங்கள் கூட மனிதனால் வாழமுடியுமாம். 

சித்தர்கள் அந்த கல்லை எங்கோ புதைத்து வைக்க, நாளடைவில் அந்த குறிப்பு மறைந்து போகிறது. அந்த கல்லை தேடும் பணியில் இறங்குகிறார் கெளதம் கார்த்திக். அவருடன் அவரது ஆசிரியர் மற்றும் நண்பர்களும். 

அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார்.

கடைசியாக அந்த அற்புதக் கல்லை யார் எடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதிக் கதை. 

பல படங்களில் சாக்லேட் பாய் போன்று வந்து செல்லும் கெளதம் கார்த்திக் இந்த படத்தில் சில ஆக்‌ஷன் காட்சிகளில் களம் இறங்கி அடித்துள்ளார். 

படத்தில் சோனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு கதாநாயகிகள் இருந்து ரொமான்ஸ் காட்சிகள் செய்வதற்கு இடங்கள் இல்லாமல் போனது வருத்தம் தான்.  

மலையும் அருவிகளும் சார்ந்த காட்சிகளை பார்த்தால், வாழ்வில் ஒருமுறையாவது அங்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.

கே.பி. இசையில் பாடல்களை விட பின்னணி இசை பேசப்படும். ஆக்சன் அட்வென்சர் கதைகள் இளைஞர்களுக்கு பிடிக்கும்.  எம் எஸ் பாஸ்கர் காமெடி பொறுமையை சோதனை செய்கிறது.  

சென்னையில் இருந்து வடநாட்டுக்கு செல்லும்போது வெறுமனே டிரெய்னை காட்டாமல் அதில் கிராபிக்ஸ் கலந்து ரூட்டு போட்டிருப்பது சூப்பர்.

மலை, அருவி, காடு என அனைத்தையும் கடந்து கஷ்டப்பட்டு குகை உள்ளே செல்லும் கவுதம் வெளியே வரும்போதும் படு ப்ரெஸ்ஸாகவே இருக்கிறார். 

மேக்கிங்கில் வெற்றி பெற்றாலும் வலுவான திரைக்கதை இல்லாதது சற்று பின்னடைவு தான்.

Rating :

0 1 2 2.8/5
share