Movie Reviews

  • Home/
  • Reviews/
  • இறுதிச்சுற்று படம் விமர்சனம்

இறுதிச்சுற்று படம் விமர்சனம்

இந்தியாவின் நம்பர் ஒன் பாக்சிங் கோச்சாக இருக்கும் மாதவன் இந்திய பாக்சிங் கிளப்பில் வேலை செய்கிறார் கோச்சாக. பெண்கள் மாதவனிடம் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். கிளப்பில் உள்ள உயரதிகாரியான ஜாகீர் மாதவனை பிடிக்காத காரணத்தால் சில காரணங்களை கூறி அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்துவிடுகிறார்.


இதனால் கோபமடைந்த மாதவன் சென்னை சென்று அங்குள்ள ஒரு பெண்ணை பாக்ஸிங்கில் சாம்பியன் ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை வருகிறார். சென்னையில் பாக்ஸிங்கில் பயிற்சி பெற்று வரும் லக்ஸ் போலீஸ் வேலை பெற வேண்டும் என்ற முனைப்பில் பாக்ஸிங் கற்றுக் கொள்கிறார். பல வருடங்களாக கற்றுக்கொண்டு வருகிறார் லக்ஸ்.


அவரது தங்கையாக வரும் மதி மீன் விற்று வியாபாரம் நடத்தி வருகிறார். அவரிடம் பாக்ஸிங் விளையாடுவதற்கான திறமைகள் இருப்பதை பார்த்து விடுகிறார் மாதவன். தினமும் 500 ரூபாய் தருகிறேன் என்னிடம் வந்து முறைப்படி பாக்ஸிங் கற்றுக் கொள் என மாதவன்மதியிடம் கூற மதியும் சம்மதிக்கிறார்.


முதலில் தனது அக்காவிற்காக பாக்ஸிங்கில் சேர்ந்து கொண்ட மதி, பின்னர் வேண்டா விருப்பமாக அதில் இருந்து வேண்டுமென்றே உள்ளூர் போட்டியில் தோற்று விடுகிறார். பின்னர், ஒரு நிலையில் மாதவன் தனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை உணர்கிறார் மதி. பிறகு, மாதவன் மேல் காதல் வயப்படுகிறார் மதி. 

இதை சிறிதும் விரும்பாத மதியின் அக்கா ல்க்ஸ், மதியை சில வேலைகள் செய்து செலக்‌ஷன் போட்டியில் தோற்கடிக்க வைத்து விடுகிறார்...பின் மாதவன் மதியை அடித்து விரட்டி விட..கதையில் திருப்பம் ஏற்படுகிறது....


பிறகு மதி என்ன ஆனார்???? மாதவனின் கனவு பலித்ததா??? தனது உயர் அதிகாரிகளின் முன்னால் விட்ட சவாலில் வென்றாரா??? எனபதே மீதி கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்காரா.


மதியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இது இவருக்கு முதல் படம் என்பது பல பேரால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. கதையோடு கதையாக ஒன்றி நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவர் ஏற்கனவே பாக்ஸிங் கற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாதவனின் நடிப்புத் திறமையை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்திற்காக பல வருடங்கள் தன்னையும் தனது உடலையும் வருத்தி நடித்ததற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.


நல்ல ஒரு கதை என்றாலும் ஆங்காங்கே லாஜிக் இல்லா சில விஷயங்கள் எரிச்சலூட்டுகின்றன.... எங்கோ ஒரு இடத்தில் மோசமான குணங்களுடன் ஒரு அதிகாரி இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கலாம், பட்சத்தில் அனைத்து அதிகாரிகளும் தவறாகவே இருப்பார்கள் என காட்டியிருப்பது சற்று கோபத்தை வர வைக்கிறது. 


ஒரு  விளையாட்டு சம்மந்தமான கதையை கையில் எடுத்திருக்கும் போது அதை பார்க்கும் மக்கள் மனதில் தங்களது குழந்தைகளை அந்த விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்க வேண்டும்.


இந்த படத்தினை பார்த்த பிறகு குழந்தைகள் தங்கள் விளையாட்டின் மேல் காட்டும் அக்கறையை பெற்றோர்கள் எதிர்க்கும் விதமாகதான் அமையும் என்பதில் ஐயமில்லை....


ப்ளஸ்: படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையோடு கதையாக கலந்திருப்பது.

              மாதவன் & ரித்திகாசிங்கின் உழைப்பு

              பின்னணி இசை

              




Rating :

0 1 2 3 3.6/5
share