Movie Reviews

  • Home/
  • Reviews/
  • இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் விமர்சனம்

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் விமர்சனம்


காதல் கதைகளை விதவிதமாக ரசிகர்களுக்கு கொடுத்த தமிழ் சினிமாவில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் ஒரு புதிய முயற்சி. இன்றைய காதல் எவ்வளவு பிரச்சனைகளை மன ரீதியாக உண்டாக்குகிறது என்று தெளிவாக விளக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களுக்கு நம் பாராட்டுகள்.
        
பிக் பாஸ் முதல் சீசனில் வந்து அனைவரையும் கவர்ந்த ஹரிஷ் கல்யாண் தான் படத்தின் நாயகன். தனக்கு கிடைத்த வாய்ப்பை சீரான முறையில் பயன்படுத்தி இருக்கிறார். நடிப்பில் முந்தைய படத்தை விட மெருகேறி இருக்கிறார். ஷில்பா மஞ்ஜூனாத் நாயகியாக தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். மேலும் இவர்களுடன் பார் டெண்டர் ஆக பாலசரவணன், படத்திற்கு விமர்சனம் எழுதுபவராக மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ளனர். கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து இருப்பதால் அனைவரும் மிக இயல்பானவர்களாகவே ரசிகர்களுக்கு வெளிப்படுகின்றனர்.
        
ஆக்ரோஷமான இளைஞன் அவனுக்குள் இருக்கும் வலி. பின்னர் அந்த வலியை மறக்க செய்யது மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழவைக்கும் ஒரு காதல். காதலில் ஏற்படும் சண்டைகள், பிரிவுகள் என்று காதலில் உள்ள அணைத்து உணர்ச்சிகளையும் கண்னமுன்னே காட்டி உள்ளார் இயக்குனர். இறுதியில் இஸ்பேடும் இதயமும் இணைந்தது என்பது தான் கதை.  
         
வசனங்களும், நடிகர்களின் நடிப்பும் படத்தின் பலம் என்றாலும் காட்சியமைப்பு ஒரு சில இடங்களில் மிகவும் தோய்ந்து போகிறது. ரசிகர்களுக்கு ஒரு தொடர்ச்சியில் படம் நகருவதாக தெரியவில்லை. படத்தின் இசை சாம்.cs தன்னுடைய திறமையால் படத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார் காதல் காட்சிகளும், கூவத்தில் சண்டை போடும் காட்சிகளும், எதார்த்தமாக பேசிக்கொள்ளும் கட்சிகளுக்கும் ஆகச்சிறந்த பின்னணி இசையை கொடுத்துள்ளார். கண்ணம்மா பாடல் அனைவரின் மனத்திலும் இடம் பிடித்துவிட்டது மற்ற பாடல்கள் கேட்க்கும் ராகம் தான். கவின் ராஜ் ஒளிப்பதிவில் படத்தின் நிறம் நன்கு பிரதிபலிக்கிறது. புதிய கோணத்தில் காதல் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும். 

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் - காதல் கண்ணம்மா 
 (2.5 \ 5 )
         

Rating :

0 1 2 2.5/5
share