Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஜில் ஜங்க் ஜக் படம் விமர்சனம்

ஜில் ஜங்க் ஜக் படம் விமர்சனம்


2020ல் நடைபெறும் கொள்ளை, பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல் விலை ஏற்றம் என அந்த காலத்தில் ஏற்படும் ஒரு கற்பனைக் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர். 2020ல் நடைபெறும் கதை என்பதால் அவர்கள் சொல்ல வந்ததை நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சரி....கதைக்குள் செல்வோம்...

ஒரு மிகப்பெரிய ரவுடியான தெய்வநாயகம் தான் செய்யும் ஒவ்வொரு கடத்தலிலும் போலிஸில் சிக்கிக் கொள்கிறார். கடைசியாக 4 கிலோ அளவிலான கஞ்சாவை China வியாபாரிகளிடம் ஒப்படைக்காவிட்டால் தனது வியாபாரமும், தனது உயிரும் போய் விடும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் தெய்வாநாயகம் என்ற தெய்வா.

இதற்காக அந்த 4 கிலோ கஞ்சாவையும் ஒரு விஞ்ஞானி உதவியுடன் பெயிண்டாக மாற்றி அந்த பெயிண்டை ஒரு காரில் அடிக்கின்றனர். அந்த காரை China வியாபாரிகளிடம் சரியான நேரத்தில் ஒப்படைப்பதற்காக மூன்று இளைஞர்களை தேர்வு செய்கிறார் தெய்வா. ஜில்(சித்தார்த்), ஜங்(அவினாஷ் ரகுதேவன்), ஜக்(சனந்த்) ஆகிய மூன்று இளைஞர்களும் தான் அந்த காரை எடுத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் இவர்களது அசாதாரணத்தால் கார் வெடித்துச் சிதறுகிறது. 

இந்த விஷயம் தெய்வாக்கு தெரிந்தால் தங்களை உயிரோடு விட மாட்டார் என்று சின்னதாக ஒரு திட்டம் திட்டுகின்றனர் ஜில் ஜங் ஜக் குழுவினர். தெய்வாவின் பரம எதிரியான ரோலெக்ஸ் ராவுத்தரிடம் (ராதாரவி) தெய்வாவை சிக்க வைக்கின்றனர். அந்த திட்டம் பழித்ததா?? அந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள்??? என்பதை நல்ல ஒரு கதை அமைப்பில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரஜ் வைத்தி.

அவ்வளவு பெரிதான கதை இல்லை.... காமெடி கதையாக எடுக்க நினைத்து பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்த வைக்கிறது. இரண்டாம் பாதி சற்று அலுப்பை வர வைக்கிறது. 2020க்கு எடுத்துச் செல்வதாக கூறி 1980க்கே எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஜில் ஜங் ஜக்- ஜக் தான்!!!!

2020ல் நடக்கும் ஒரு கற்பனையான சம்பவம் என்பதால் படத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் நம்பகத்தன்மையாகவே நம்ப வைக்கிறார் இயக்குனர். சித்தார்த்தின் நடிப்பு திறமையை இந்த படத்தில் காணலாம். அவரது முக பாவனை அனைவரின் பார்வையும் அவர் பக்கம் பார்க்க வைக்கும். மேலும், ஜங் மற்றும் ஜக் ரோலில் நடித்துள்ள இருவரும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் தான்.

பை என்னும் கதாபாத்திரத்தில் வரும் பிபின் என்பவரின் நடிப்பு அருமை. அவர் பேச ஆரம்பித்தாலே சிரிப்பினை அள்ள வைத்துவிடுவார். அவரது குரல் அவ்வளவு பிரபலம்...., குரலை கேட்டவர்களுக்கு தெரியும் எப்படி பிரபலம் என்று... 


தெய்வநாயகமாக வரும் அமரேந்திரன், ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் டத்தோ ராதாரவி, அட்டாக் ஆல்பர்ட்டாக வரும் சாய் தீனா என அனைவரும் கதையின் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுகின்றனர்.

இசை பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும், பின்னணியில் ஒகே வாங்குகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு அருமை.

Rating :

0 1 2 3/5
share