Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஜுங்கா படம் விமர்சனம்

ஜுங்கா படம் விமர்சனம்

விஜய் சேதுபதி படம் என்றாலே வித்தியாசமான படமாதான் இருக்கும். ஜுங்கா என்ற தலைப்பே படம் பார்க்க தூண்டுகிறது, அப்படி இந்த படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன், யோகி பாபு நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஜுங்கா.

படத்தின் ஆரம்பித்திலேயே ஜுங்காவை(விஜய் சேதுபதி) போலீஸ் இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் செய்ய அழைத்துசெல்லும்பொழுது பிளாஸ்பேக் ஆரம்பமாகிறது. பஸ் கண்டக்டராக வருகிறார் ,பஸ் கண்டக்டராக இருந்தாலும் தனது உடம்பில் ஓடுவது டான் ரத்தம் என உணரும் சண்டைக் காட்சி பிரமாதம்.

கதை என்னவென்றால் விஜய் சேதுபதி, அவங்க தாத்தா, அப்பா, என மூன்று பேரும் ஒரு தியேட்டரை கண்ணும் கருத்துமாய் கட்டிக்காத்து வருகின்றனர் அதை எப்படியாவது ஓட வைக்கணும் அதை பார்த்து அம்மா சரண்யா சந்தோசப்படணும் என்று நினைக்கிறார்.

எனவே தனது பூர்விக சொத்துக்களை கைப்பற்ற பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்க்கு பறக்கிறார்கள் யோகிபாபுவும் ஜுங்கா டானும். அங்கு சென்று அவரின் இலக்கை அடைந்தாரா இல்லை சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியனை கை பிடித்தாரா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சரண்யாவின் உணர்வு பூர்வமான நடிப்பு சிறப்பு. யோகி பாபு வின் காமெடி படத்திற்கு பக்க பலம். மடோனா செபாஸ்டியன்னின் காதல் காட்சி அருமை. பாரிஸின் அழகை மிகவும் நயமாக காட்டி ரசிக்க வைக்கிறார் இயக்குனர் .பாரிஸில் விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் கஞ்சத்தனம் கொண்ட டானாக காமெடியில் அடிக்கும் லூட்டிகள் சூப்பர். ஆனால் இரண்டாவது பாதி கொஞ்சம் இழுவைதான். இப்படிபட்ட படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் கோகுலுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் ஜீங்கா ஒரு கஞ்சத்தனமான டானின் காமெடி கலக்கல்


Rating :

0 1 2 3/5
share