Movie Reviews

  • Home/
  • Reviews/
  • காஷ்மோரா படம் விமர்சனம்

காஷ்மோரா படம் விமர்சனம்


பில்லி, சூனியம், ஏவல் இவற்றை கண்டுபிடித்து, நிவர்த்தி  செய்யும் ‘காஷ்மோரா’ என்கிற ஹைடெக் மந்திரவாதியாக தன்னை காட்டி  கொண்டு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார் கார்த்தியும் அவரது தந்தை விவேக்கும் . இப்படி சில பல மோசடி வேலைகளை செய்து அங்குள்ள அரசியல்வாதி ஒருவருக்கு உதவி செய்கிறார்.

அந்த அரசியல்வாதியும் அனைத்து காரியங்களையும் கார்த்தியை வைத்தே செய்கிறார். அரசியல்வாதியின் வீட்டில் ரெய்டு வருவதை அறிந்த அவர், தனது சொத்து பத்திரங்கள், பணம் அனைத்தையும் கார்த்தியின் வீட்டில் வைக்கிறார்கள். கார்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இவை அனைத்தையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகும் தருணத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அங்கு போன பிறகு தான் தெரிகிறது ராஜ் நாயக் என்ற பேய்தான் இந்த பங்களாவிற்கு கொண்டு வந்திருக்கிறது என்று,  எதற்காக அந்த ஆவி அவர்கள் குடும்பத்தை சிறைப்பிடித்தது..??? அந்த ஆவியிடம் இருந்து கார்த்தியின் குடும்பத்தினர் தப்பித்தார்களா...?? இல்லையா..??? என்பதை 700 ஆண்டு காலம் முன்னோக்கி சென்று கதையை தந்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.

மொத்த கதையையும் தனி ஒரு ஆளாக சுமந்து சென்றிருக்கிறார் கார்த்தி. மிகவும் அசாத்தியமாண நடிப்பில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு கார்த்தியை காஷ்மோராவிற்கு முன் காஷ்மோராவிற்கு பின் என ஒரு பார்வையில் பார்க்கும் பார்வையை இந்த படத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார் கார்த்தி.

அதுவும் மொட்டை அடித்துக் கொண்டு கொஞ்சம் நேரம் மட்டுமே வரும் ராஜ் நாயக் கதாபாத்திரம் அனைவரையும் மிரள வைத்து விடுகிறது. பேயாக வரும் ராஜ் நாயக் கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தின் வலிமையை புரிந்து கொண்டு மிரட்டலை கொடுத்திருக்கிறார் கார்த்தி.

நயன்தாரா சிறிது நேரம் மட்டுமே வந்தாலும், அழகு ராணியாக வந்து தனது வாள் வீச்சில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுகிறார். குறிப்பாக நயன்தாரா, ராஜ்நாயக் தலையை துண்டாக்குவதும் ராஜ்நாயக், நயன்தாராவை கொல்வதும் ஒரே சமயத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது.

விவேக்கின் காமெடி படத்திற்கு மேலும் பலம் தான். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சற்று மிரட்டலை கொடுத்திருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகத்தின் வேகத்தை சற்று ஏற்றியிருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை படத்திருக்கு பலம் சேர்க்கின்றன. மொத்தத்தில் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கோகுல். 

Rating :

0 1 2 2.8/5
share