Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கபாலி படம் விமர்சனம்

கபாலி படம் விமர்சனம்சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற மாபெரும் மலையுடன்,  இரண்டு படங்களை இயக்கி மக்களிடையே அநேக வரவேற்பை பெற்ற ரஞ்சித் இணைந்து புதிய படம் எடுக்கப்போகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே படத்தின் மீதான ஒரு காதல் அட்டாக் ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தொற்றிக் கொண்டது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் கபாலி என்ற சொல்லை ஒருமுறையோ அல்லது பல முறையோ செவிகளின் வழியாக கேட்டிருப்பார்கள் அல்லது உணர்ந்திருப்பார்கள் ரசிகர்கள். படத்தின் விளம்பரமோ விண்ணை பிளக்கும் அளவிற்கு விமானத்திலே ஒட்டப்பட்டு வானடிக்கவிடப்பட்டது. இப்படி பல வடிவங்களில் உலகை சுற்றிய கபாலியின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடி, சில வஞ்சகர்களால் அங்குள்ள சிறையில் சுமார் 25 வருடங்கள் அடைபட்டு வெளியே வருகிறார் ரஜினி. சிறை சென்ற பின்னர் தன் குடும்பத்திற்கு என்ன ஆனது என்றும், அங்குள்ள தமிழ் மக்கள் என்னவெல்லாம் சிரமத்துக்குளாகியிருக்கிறார்கள் என்றும் மிகுந்த கவலையுற்ற ரஜினி, அவர்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கி தன் வேட்டையை தொடர்கிறார். தன் குடும்பத்தினரை கண்டுபிடித்தாரா..??? வஞ்சகர்களின் கையில் சிக்கிய தமிழர்களை மீட்டெடுத்தாரா..??? என்று ரஜினி ஆடும் இந்த வேட்டையே படத்தின் கபாலி வேட்டை.

படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் மட்டுமே. சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாரும் இந்த கதபாத்திரத்திற்கு சாத்தியமில்லை. மாஸ், ஸ்டைல், சண்டைக் காட்சிகள், செண்டிமெண்ட் என அனைத்திலும் தனது பாணியை செம்மையாக செய்திருக்கிறார் ரஜினி. தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் தான் ஒருவன் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை தன்னுடைய ஒவ்வொரு காட்சிகளிலும் பொட்டில் வைத்து அடித்தாற்போல் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

வயசானாலும் அந்த அழகும், ஸ்டைலும் உங்கள விட்டு இன்னும் போகவே இல்ல என்று, அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனைவருக்குள்ளும் இந்த ஒரு வியப்பு பிரதிபலிக்கும். மீண்டும் தன் மனைவியை ரஜினி பார்க்கும் போது அவருடைய முக பாவணைகளில் காட்டும் அந்த நடிப்பால், நடிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

ராதிகா ஆப்தே - நல்ல ஒரு மார்டன் பெண்னை நன்கு சேலையை சுற்றி ஒரு குடும்பப் பெண்ணாக வலம் வர வைத்திருக்கிறார் ரஞ்சித். தனது கணவனை பார்க்கும் போது தனது நடிப்பால் அப்ளாஷை அள்ளுகிறார்  ராதிகா ஆப்தே . தன்ஷிகா நல்ல ஒரு மார்டன் பெண்ணாக வந்து அதிரடியிலும் புகுந்து விளையாடுகிறார். படத்தில் இரண்டாம் பாதி முழுவதும் கதையுடன் பயணம் செய்கிறார் தன்ஷிகா.

ஜான் விஜய், கலையரசன், அட்டகத்தி தினேஷ், சம்பத், ரித்விகா, கிஷோர், லிங்கேஷ் என அனைவரும் தன் நடிப்பை மிகவும் நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்திருக்கிறார். வில்லன்களின் மிரட்டல் படத்திற்கு கூடுதல் பலம் தான். வசனத்தில் “நீ என்ன ஆண்ட பரம்பரையோ, மலேசியாவை ஆளத் துடிக்கிறியோ..?? என்று கிஷோர் சொன்னதும் “ஆண்ட பரம்பரை இல்லடா ஆளப் பிறந்தவண்டா இந்த கபாலி” என்று ரஜினி கூறும் அந்த இடத்தில் ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது... “நெருப்புடா”வின் உச்சகட்டம்...

கதைக்கேற்றவாறு சூப்பர் ஸ்டாரை மிக கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் ரஞ்சித். மலேசியாவில் வாழும் தமிழர்களின் வாழ்க்கைக்காக போராடும் ஒரு போராளியின் போராட்டத்தை காட்டியதற்காக ரஞ்சித்திற்கு ஒரு பெரிய பூங்கொத்தை வழங்கலாம். முரளியின் ஒளிப்பதிவில் மலேசியா மிகவும் அழகாக இருக்கிறது. கச்சிதமாக ரசிக்கும் படியாக எடிட்டிங் செய்திருக்கிறார் பிரவின்.

படத்தின் முதல் பாதியின் வேகத்தினை சற்று ஏற்றியிருக்கலாம். சந்தோஷ் நாராயணனின் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் மில்லியன் ஹிட்ஸ், பின்னணி இசையிலும் தனது மிரட்டலை காட்டியிருக்கிறார்மி சந்தோஷ். கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் இதுவரை வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனைகளையும் கபாலி முறியடிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கபாலி - சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கான ஒரு அருமையான விருந்து...

மகிழ்ச்சி...

Rating :

0 1 2 3 3.7/5
share