Movie Reviews

  • Home/
  • Reviews/
  • காதலும் கடந்து போகும் விமர்சனம் படம் விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம் படம் விமர்சனம்



இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு தனது தாய் தந்தையரின் அறை குறை சம்மதத்துடன் சென்னைக்கு வேலைக்காக வருகிறார் மடோனா செபஸ்டின்.. ஒரு பெரிய ஐ டி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில் அவர் வேலை பார்த்த கம்பெனியை இழுத்து மூடி விட என்ன செய்வது என அறியாது திகைத்து நிற்கிறார் மடோனா.

மீண்டும் வீட்டிற்கு சென்றால் சென்னைக்கு வேலைக்காக அனுப்ப மாட்டார்கள் என்று எண்ணி ஒரு சாதாரண வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அங்கிருந்து கொண்டு வேலை தேடுகிறார் மடோனா.  அப்போது தான் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வரும் விஜய் சேதுபதியின் நட்பு கிடைக்கிறது. 

ஒரு ரவுடியிடம் வேலை பார்க்கிறார் விஜய் சேதுபதி. ஒரு பாரின் ஓனர் ஆக வேண்டும் இவரது கனவு. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு என்ன ஆனது??? காதலானதா?? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா??? விஜய் சேதுபதியின் கனவு நிறைவேறியதா??? என்பதே மீதிக் கதை....

சூது கவ்வும் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. திரைக்கதையை அமைப்பதில் வல்லவர் என்பதை தனது முதல் படத்திலேயே நிரூபித்தியிருப்பார் நலன் குமாரசாமி. 

விஜய் சேதுபதி தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். தனது இயல்பான நடிப்பினை இந்த படத்திலும் அவர் வெளிக்காட்டியிருக்கிறார். காமெடி களத்திலும் சரி, ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் தருணமும் சரி, மற்றவர்களிடம் இவர் அடி வாங்கும் அந்த காட்சிகளிலும் சரி தனது நடிப்பின் திறமையை அள்ளி தெளித்திருக்கிறார்...

பிரேமம் படத்தின் மூலம் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் மடோனா செபஸ்டின். அந்த படத்தினை பார்க்கும் போதே இவர் தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் ஆசையை செம்மையாக பூர்த்தி செய்திருக்கிறார் மடோனா செபஸ்டின்... தனது மிகையில்லாத நடிப்பால் அழகாக இருக்கிறார் இவர்... இன்னும் தமிழில் பல படங்களை தனது கைவசப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.. மூன்று காட்சிகளில் மட்டும் தென்பட்டாலும் தனது முக பாவனையில் மிரட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.

சந்தோஷ் நாராயணணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரக.. அதிலும் க க க போ பாடல் அரங்கை அதிர வைக்கிறது. பின்னணி இசையை தேவையான இடத்தில் மட்டும் உபயோகப்படுத்தி கைத்தட்டலை பெறுகிறார் இசையமைப்பாளர்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அருமை.. சூது கவ்வும் படத்தின் வெற்றியை பட பாணியை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார் நலன் குமாரசாமி..

படத்தின் வேகத்தை சற்று கூட்டியிருந்தால் சற்று கூடுதல் நலமாக அமைந்திருக்கும்...

காதலும் கடந்து போகும் - அழுத்தமான உலகில் அனைத்தையும் கடந்து செல்ல “காதலும் கடந்து போகும்” போகலாம்... வெற்றியோடு பயணிக்கும்..

Rating :

0 1 2 3 3.3/5
share