Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கண்ணே கலைமானே விமர்சனம் படம் விமர்சனம்

கண்ணே கலைமானே விமர்சனம் படம் விமர்சனம்

          "தர்மதுரை" படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் "சீனு ராமசாமி" இயக்கிய திரைப்படம் "கண்ணே கலைமானே". இயல்பான எதார்த்தமான கதை களத்தை தேர்வு செய்து மக்களுக்கு எந்த தொய்வும் இல்லாமல் ருசிகரமாக கொடுப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள். "கண்ணே கலைமானே" படம் அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று நம்மை மெய் மறக்க செய்து கதாப்பாத்திரங்களோடு கலக்கவைத்ததில் சீனு ராமசாமியை மிஞ்ச ஆள் இல்லை என்றே தோன்றுகிறது. தன் படங்களில் காதல், பாசம் போன்ற மனிதர்களின் மெல்லிய உணர்ச்சிகளை தொட்டு வருடாமல் விடமாட்டார் சீனு ராமசாமி. இந்த கதையின் கதாப்பாத்திரங்கள் கமலக்கண்ணன் (உதயநிதி), பாரதி (தமன்னா) ஆகிய இருவருக்கும் இடையில் நடக்கும் இயல்பான காதல் அதனால் அவர்கள் சந்திக்கும் விஷயங்களே "கண்ணே கலைமானே". 

           நேர்மையான கிராமத்து கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும் உதயநிதி, தமன்னா மற்றும் உடன் நடித்த அத்துணை நடிகர்களும் படத்திற்கு மிக பொருத்தமான தேர்வு; எங்கும் காட்சி பிழையின்றி நேர்த்தியான ஒரு படைப்பை நம் கண் முன் கொண்டுவந்துள்ளார். உதயநிதியின் தாயாக நடித்திருக்கும் வடிவுக்கரசி நடிப்பின் நேர்த்தியை உணர்த்தியுள்ளார். உதயநிதி விவசாயம் படித்த இளைஞராகவும், கடன் வாங்கி அதனால் கஷ்டப்படும் அவஸ்த்தையும் கண் கலங்க வைக்கிறது வங்கி மேலாளராக நடித்திருக்கும் தமன்னா எந்த நேரத்திலும் தன் நேர்மையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தமன்னா நடித்த படங்களிலேயே இது தான் சிறந்த திரைப்படம் என்று சொல்லலாம். இன்னும் படத்தில் ஆழமான, உருக்கமான காட்சிகள் உண்டு ஆனால் அதை இப்போது சொன்னால் வரம்பு மீறுவதாகும். நீங்கள் படம் பார்க்கும்பொழுது உணர்ச்சிமிகுந்த காட்சிகள் ஏராளமாக உண்டு என்பதை அறிவீர்கள்.

         யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் உன்னதமாகவும் வைரமுத்துவின் வரிகள் ஆழமானதாகவும் உள்ளன. ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் படத்திற்கு உயிர் நாடியாக உள்ளது. வசனங்கள் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் உள்ளன.
 
         ரம்மியமான இதயத்தை வருடம் படத்தை பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன அப்படி ஒரு படத்தை தந்ததற்கு சீனு ராமசாமி அவர்களுக்கு மணமார்ந்த பாராட்டுக்கள். 
கண்ணே கலைமானே - உணர்ச்சியின் பிம்பம் 

Rating :

0 1 2 3 4 4.6/5
share