Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கத்தி சண்டை படம் விமர்சனம்

கத்தி சண்டை படம் விமர்சனம்


மருது திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் அடுத்த படம் ‘கத்தி சண்டை’. சுராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரீஎண்ட்ரீயாக வடிவேலு தமிழ் சினிமாவிற்குள் வந்துள்ளதால் அநேக எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு நிலவியுள்ளது. 

போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஜெகபதி பாபு. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் ஒன்றை பிடித்து அதனுள் இருந்த 300 கோடி ரூபாயில் 50 கோடியை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு 250 கோடியை தனக்கென சுருட்டிக் கொள்கிறார் ஜெகபதி பாபு. 

ஜெகபதி பாபுவின் தங்கையாக வருகிறார் தமன்னா. அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் விஷால், தாம் இருவரும் பூர்வ ஜென்மத்து காதலர்கள் என கதைவிட்டு, லோக்கல் தாதா சூரியின் உதவியுடன் போகப்போக அவர் மனதில் இடம் பிடிக்கிறார் விஷால். 

பின்னர், பல சோதனைகளுக்கு பிறகு ஜெகபதி பாபு விஷாலை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். சில நாட்களுக்கு பிறகுதான் தெரிகிறது 250 கோடியை ஜெகபதி பாபுவிடம் இருந்து பறிப்பதற்காக மட்டுமே தமன்னாவை விஷால் காதலித்திருக்கிறார் என்று. 

விஷால் அந்த 250 கோடியை எதற்காக ஜெகபதி பாபுவிடம் இருந்து பறித்தார்..??? பறித்துக் கொண்டு அந்த பணத்தை வைத்து என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை..

விஷால் வழக்கம் போல் 4 பேரை அடித்து காற்றில் பறக்க விடுவதும், காரை வானில் மிதக்க விடுவதுமான சண்டைக் காட்சிகளில் மிரள வைக்கிறார். 

மாடர்ன் கேர்ளாக தமன்னா அழகிற்குல் மேல் அழகு சேர்க்கிறார். இருவருடனான காதல் ட்ராக் ரசிக்கும் படியாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் சூரியின் ராஜ்ஜியம் தான். 

அதிலும் அந்த மகாபலிபுரத்தில் நடக்கும் அதாலடி சூப்பர்.  ’சரித்திரத்துக்குப் பதிலா தரித்திரம்னு எழுதின.. ஆனா ஹார்ட்டுக்குப் பதிலா ஏண்டா கிட்னி வரைஞ்ச?’ என்று விஷால் சூரியை அடிக்கும் காட்சி.. அல்டிமேட் காமெடி. சூரி இல்லாமல் படத்தின் முதல் பாதி சாத்தியமில்லை.

இரண்டாம் பாதியில் பூத்ரி டாக்டராக எண்ட்ரீ ஆகிறார் வடிவேலு. ‘அது மதுரை லூசு இல்லடா... மெமரி லாஸ்’ என வடிவேலுவின் சில காமெடி சரவெடிகள் வடிவேலுவின் ரீ எண்ட்ரியை உறுதிபடுத்துகின்றன.

இரண்டாம் பாதி வடிவேலு இல்லாமல் இல்லை என்றாகும் நிலையில் உள்ளது. முதல் பாதி இரண்டாம் பாதி இரண்டிற்கும் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அதிகமாகவே இருக்கின்றன. அரசியல் வசனங்கள் ஆங்காங்கே எட்டி பார்ப்பது, ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான வீரமான படத்தின் சாயல்கள் எட்டி பார்ப்பது என குறைகள் ஆயிரம் இல்லாவிட்டாலும் நூறாவது சொல்லிவிடலாம்.

‘நான் கொஞ்சம் கருப்புதான்..’ பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் காதில் நிற்கவில்லை. பின்னனி இசை - முடியலப்பா...

காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் கொஞ்சம் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நலமாக இருக்கும் இயக்குநரே..

கத்தி சண்டை - காமெடியில் மட்டுமே ஷார்ப்... மற்றபடி இது வெத்து சண்டை தான்..

Rating :

0 1 2 2.7/5
share