கேணி படம் விமர்சனம்


தண்ணீர். தண்ணீ.. தண்ணீர்...  அக்காலத்தில் இதற்கு எந்த ஒரு பஞ்சமும் இருந்ததில்லை. ஆனால், இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியா.? செயற்கை முறைகளின் அணிவகுப்பா.? என எதுவென்று தெரியாமல் தண்ணீருக்கு பஞ்சம். பஞ்சம்.. பஞ்சம்... என்ற வார்த்தைகளே காதுகளில் அதிகமாக ஏக்கக் குரல்களாக ஒலிக்கின்றன. அப்படி ஏற்பட்ட ஒரு கிராமத்தின் தண்ணீர் பஞ்சமும், அப்பஞ்சத்தை தீர்க்க வந்த ஒரு கிணறும் தான் இந்த கேணி படத்தின் ஒன்லைன்.

கேரளாவில் உயர் பதவியில் உள்ள ஜெயப்ரதாவின் கணவர் மீது தீவிரவாதி என்ற ஒரு தவறான முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, அந்த வேதனையில் சிறையிலேயே உயிரை விடுகிறார் அவர்.

அதன் பிறகு தமிழகத்தில் உள்ள தங்களது சொந்த கிராமத்திற்கு குடியேறுகிறார் ஜெயப்ரதா.  எனவே, கணவரின்  கடைசி ஆசையின் படி தமிழக எல்லையில் உள்ள கிராமத்தில் குடியேறுகிறார் ஜெயப்ரதா. அந்த கிராமத்து மக்கள் தண்ணீருக்காக தவிப்பதை பார்த்து தன் கிணற்றுத் தண்ணீரைக் கொடுத்து உதவ நினைக்கிறார்.

ஆனால், அந்த இடத்தை அபகரிக்க நினைக்கும் சில அதிகாரிகள் இதற்கு தடையாக இருக்கின்றனர். அத்துடன் எல்லைப் பிரச்னையை எழுப்பி, தண்ணீர் எடுக்க தடையும் வாங்கிவிடுகின்றனர்.  அப்போது, அந்த கிராமத்தின் ஊர் தலைவர் பார்த்திபன், அனுஹாசன், ரேவதி, நாசர் ஆகியோரின் உதவியுடன் கிணற்றை மீட்கும் போராட்டத்தில் இறக்குகிறார் ஜெயப்ரதா. அவரின் போராட்டம் வென்றதா?கிராமத்து மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பது மீதிக்கதை.

ஜெயப்ரதா என்னதான் கதையின் ஓட்ட நாயகியாக இருந்தாலும், கதையோடு ஒன்றாமல் தனித்து நின்ற ஒரு கதாபாத்திரத்தைத்தான் பார்க்க வேண்டிய நிலை இப்படத்தில் ஏற்பட்டிருக்கிறது. கணவருடனான ஒரு முதிர்ந்த புரிதல், காதலை வெளிப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறார் ஜெயப்ரதா. 

பார்த்திபன், நேர்மையான கிராம ஊராட்சித் தலைவராக வருகிறார். கிராமத்து மக்களுக்காக போராடும் ஒரு நல்ல மனம் படைத்தவர். அவர் ஆங்காங்கே அடிக்கும் டைமிங் வசனங்கள் சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கவும் தவறவில்லை.

அனுஹாசனின் நடிப்பு நடிப்பாகவே பார்க்க முடிந்தது. அதிகமாக கஷ்டப்பட்டு நடிக்க முற்பட்டிருக்கிறார். கதாபாத்திரத்தோடு ஒட்டாமல் சென்றதது கொஞ்சம் ப்ச்ச்ச்ச்ச்.....

நாசர்,‘தலைவாசல்’விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், பிளாக் பாண்டி,ஜெயப்பிரதா, ரேவதி,  ரேகா, பார்வதி என மிகப்பெரிய பட்டாளம் இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கான வேலையை செய்து முடித்திருக்கிறார்கள்.. 

சாம் சி.எஸ். இசையில் ஜேசுதாஸ், எஸ்.பி.பி. இருவரும் சேர்ந்து பாடும் 'அய்யாச்சாமி..' பாடல் கேட்கும் ரகம்.. பின்னனி இசை கதையோடு பயணம்... 

நௌஷாத் ஷெரிப் கேரள, தமிழ்நாடு எல்லையை அழகாக காண்பித்திருக்கிறார். 

கேணி - இன்னும் கொஞ்சம் தாகத்தை தணித்திருக்கலாம்...

Rating :

0 1 2 2.5/5
share