Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கிடாரி படம் விமர்சனம்

கிடாரி படம் விமர்சனம்



பேய் படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் என கூறலாம். அதை விட்டால் அரிவாள், கத்தி என தூக்கிக் கொண்டு திரியும் ரவுடிக் கும்பலின் கதை. இதை விட்டால் தமிழ் சினிமாவில் என்ன புதிதாக வந்து விடப்போகிறது என்ற எண்ணத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இன்று வெளிவந்த ‘கிடாரி’ எந்த வகையான விமர்சனத்தை பெற்றுள்ளது என்று பார்த்துவிடலாம்.

ஊரில் பெரிய தலைக்கட்டாக வருகிறார் வேலா ராமமூர்த்தி (கொம்பையா பாண்டியன்). தன் பார்வையாலே ஊரைக் கட்டி போட்டு வைத்திருக்கிறார். தன்னைக் கண்டால் ஊரே பயந்து நடுங்க வேண்டும் என்ற ஒரு கெளரவத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவர் இவ்வளவு தைரியமாக இருக்க ஒரே காரணம், இவருக்கு பின்னால் இருக்கும் சசிகுமார்(கிடாரி)தான். ஊரில் நடக்கும் பஞ்சாயத்துகளில் யாராவது வேலா ராமமூர்த்தியை எதிர்த்து பேசினாலோ அல்லது எதிர்த்து நின்றாலோ அடுத்த கணமே அவர்களது உயிரை எடுத்து விடுவார் இந்த முரட்டுக் கிடாரி.

இப்படியிருக்க வேலா ராமமூர்த்தியை யாரோ வெட்டி சாய்த்து விடுகின்றனர்.. யார் இந்த செயலை செய்திருப்பார் என்ற தேடுதல் படலத்தில் குதிக்கிறார் சசிகுமார். இந்த தேடுதல் படலத்தோடு ப்ளாஷ் பேக் கதை முழுவதும் நகர்ந்து செல்கிறது.

கடைசியாக வேலா ராமமூர்த்தியை யார் வெட்டினார் என்பதை சசிகுமார் கண்டுபிடித்தாரா..?? இல்லையா..?? என்பதை சிறிய திருப்பத்தோடு கூறும் கதை தான் இந்த ‘கிடாரி’.

சசிகுமார்... அப்படியே கிடாரியாக வாழ்ந்து மிரட்டியிருக்கிறார். முறுக்கு மீசை, முரட்டு பார்வை என தன் நடிப்பில் மீண்டும் அசத்தியுள்ளார். குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் படங்களில் தோன்றிய அதே அமைப்பு தான் என்றாலும் கதைக்கேற்ற ஒரு நடிப்பு தான் என விலகி செல்ல வேண்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் மிகவும் அதிகமாகவே தனது கம்பீரத்தை காட்டியுள்ளார் கிடாரி.

தனது பார்வையிலும், தனது குரலினாலும் ரெளடித்தனத்தில் நிமிர்ந்து நின்று மிரட்டியிருக்கிறார் வேலா ராமமூர்த்தி. நிகிலா சசிகுமாரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இப்போதெல்லாம் பல கொலை செய்ற ஹீரோவை பார்த்தா தான் காதல் வருது. தனது நடிப்பை கலகலவென நடிக்க வைத்து ரசிக்க வைக்கிறார் நிகிலா.

படம் முழுவதிலும் இரத்ததை சிதற விட்டிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதை சற்று தொய்வடைய வைத்திருக்கிறது. எப்போது வரும் இடைவேளை என எழுந்து கேட்கும் அளவிற்கு நீள்கிறது. 

இரண்டாம் பாதியில் நடிப்பின் கதாபாத்திரம் சற்று வேகமெடுத்து சென்றாலும் கதையில் சற்று வலு இல்லாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் நெப்போலியன் கதையை சற்று அவரது உயரம் வரை தூக்கி பிடித்து செல்கிறார்.

தர்புக சிவா இசையில் உருவாகிய பாடல்களில் ஒரு பாடல் மட்டுமே கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். கதிரின் ஒளிப்பதிவில் தென் மாவட்ட அழகை கண்முன் நிறுத்துகிறது.


”அரிவாள், கத்தி எல்லாம் நீங்க புடிச்சி புடிச்சி ரொம்ப Tired ஆகிடுச்சி சசிகுமார் அண்ணே.. கொஞ்சம் ரூட்ட மாத்துங்கண்ணே”

சசிகுமார் படம் என்றாலே என்ன இருக்குமோ அது இருக்கிறது. சசிகுமாரை ரசிப்பவர்கள் இந்த கிடாரியை ஏற்றுக் கொள்வார்கள். 

Rating :

0 1 2 2.4/5
share