Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கொடிவீரன் படம் விமர்சனம்

கொடிவீரன் படம் விமர்சனம்



சில பல பிரச்சனைகளை கடந்து நேற்று வெளியாகியுள்ளது சசிகுமாரின் ‘கொடிவீரன்’. 

சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள கொடிவீரன் வெற்றி வாகை சூடினாரா இல்லையா என்பதை காணலாம். 

சிறுவயதிலேயே அம்மாவை இழந்த சசிகுமார் தன் தங்கையே உலகம் என வாழ்ந்து வருகிறார். தன் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு பாசக்கார அண்ணன் சசிகுமார். இவர் ஒருபுறம் இருக்க, 

தன் தங்கை அவர் கணவர் இருவருக்காக கொலை குற்றத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பசுபதி ஒருபுறம். இவர் தப்பான தொழில் செய்து வாழ்க்கையில் வளர்ந்தவர். சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்து மீண்டும் ஒரு கொலை செய்கிறார் பசுபதி. 

இவரை மீண்டும் சிறையில் தள்ள போராடுகிறார் வருவாய்துறை அதிகாரி விதார்த். இதனால் பசுபதி விதார்த்தை கொல்ல துடிக்கிறார். ஒருகட்டத்தில் சசிகுமாரின் தங்கையை விதார்த் திருமணம் செய்து கொள்ள, தனது தங்கையின் கணவன் உயிரை பசுபதியிடம் இருந்து சசிகுமா காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. 

சசிகுமாருக்கு கிராமத்து கெட்-அப் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இதை நாம் பல படங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்த கதாபாத்திரமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தான் இருக்கிறது.  

தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். படம் முழுவதும் அனைவரும் பஞ்ச் டயலாக் பேசுவது கொஞ்சம் அலுப்பை தட்டுகிறது. முத்தையாவின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான். இதில் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கிறது. 

பசுபதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிரட்டல் வில்லனாக கலக்கியுள்ளார். மிரட்டலை இன்னும் கொஞ்சம் நல்லா வெளிப்படுத்தியிருக்கலாம். படுபயங்கரமான வில்லனுக்கான தோற்றம் சற்று இறக்கத்தில் தான் இருக்கிறது. 

படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

பசுபதி தன் தங்கை பூர்ணா மீது உயிராக இருக்கின்றார், சசிகுமார் தன் தங்கை சனுஷா மீது உயிராக இருக்கின்றார். இவர்கள் இருவரின் பாசத்தில் வென்றது யார் என்ற ஒன்லைனை மிகவும் ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்துள்ளார் முத்தையா.

ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார். கதிரின் ஒளிப்பதிவு பலம். 

கொடிவீரன் - குடும்பத்தோடு ஒரு முறை வீர நடை போடலாம்.... 

Rating :

0 1 2 2.7/5
share